ADVERTISEMENT

அமீரகத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள “புதிய எமிரேட்ஸ் ஐடி” பற்றிய முக்கிய அம்சங்கள் தெரியுமா உங்களுக்கு..!!

Published: 8 Aug 2021, 4:39 PM |
Updated: 8 Aug 2021, 5:03 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எமிரேட்ஸ் ஐடி எனும் அமீரக அடையாள அட்டைக்கு பதிலாக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எமிரேட்ஸ் ஐடியை அமீரக அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எமிரேட்ஸ் அடையாள அட்டையில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) இன்று சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி, இந்த புதிய எமிரேட்ஸ் ஐடியில் ஐந்து முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவை,

>> கண்ணுக்குத் தெரியாத தரவின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: இந்த புதிய அம்சத்தின் மூலம் எமிரேட்ஸ் ஐடியில் பதிவேற்றப்பட்டுள்ள தரவுகளை ICA உடன் மின் இணைப்பு (E-LINK) அமைப்பு மூலம் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

>> நீண்ட நாட்கள் சேவை வழங்கக்கூடிய உயர்தர அட்டை: இந்த புதிய அட்டை பாலிகார்பனேட்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, இதனால் புதிய எமிரேட்ஸ் ஐடியின் சேவை காலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும்.

>> ஒரு ஒருங்கிணைந்த 3D புகைப்படம்: லேசர் மூலமாக அச்சிடப்பட்ட புகைப்படம் அடையாள அட்டை வைத்திருப்பவரின் பிறந்த தேதியுடன் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

>> மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப பண்புகள்: புதிய அடையாள அட்டையின் சிப் அதிக திறன் மற்றும் தொடுதல் இல்லாத தரவு வாசிப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.

>> கூடுதல் தகவல் மற்றும் குறியீடுகள் வரையறை: புதிய தகவலில் அடையாள அட்டை வைத்திருப்பவரின் தொழில்முறை சார்ந்த தரவு, அவரது எமிரேட்ஸ் ஐடியை வழங்கிய எமிரேட் பெயர் மற்றும் அடையாள அட்டைக்கு சொந்தக்காரர் சார்ந்த நாடு ஆகியவை அடங்கியிருக்கும்.

இதற்கு முன்னதாக ICA தனது மொபைல் ஆப் மூலம் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எமிரேட்ஸ் ஐடியின் மின்னணு பதிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைமுறையில் இருக்கும் அடையாள அட்டை மற்றும் அமீரக பாஸ்போர்ட்டின் புதிய வடிவமைப்புகள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலில் அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அடையாள ஆவணங்கள், தனிநபரின் அடையாள மோசடிக்கு எதிராகவும், பயண ஆவணங்களில் தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தவும் மேம்படுத்தப்பட்ட மின்னணு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) கூறியுள்ளது.