ADVERTISEMENT

அமீரகத்தில் வரவிருக்கும் நீண்ட வார விடுமுறை..!! அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு..!!

Published: 5 Aug 2021, 3:28 AM |
Updated: 5 Aug 2021, 4:47 AM |
Posted By: admin

இஸ்லாமிய நாட்காட்டியின்படி மாதங்களில் கடைசி மாதமான துல் ஹஜ் மாதம் இன்னும் ஒரு சில நாட்களில் முடியவிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து புதிய வருடம் ஆரம்பமாகவிருப்பதால் அதற்கான விடுமுறையை அமீரக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமிய நாட்காட்டியின்படி 1443 ஆம் ஆண்டிற்கான ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை பொதுத் துறையால் குறிக்கப்படும் என்று அரசாங்க மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் (FAHR) புதன்கிழமை அறிவித்துள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி, துல் ஹஜ் மாதம் 30 நாட்களாக இருந்தால் ஆகஸ்ட் 9 திங்கள் கிழமை நடப்பு ஆண்டு முடிவடையும் மற்றும் ஆகஸ்ட் 10 செவ்வாய்க்கிழமை முஹர்ரம் 1, 1443 ஆரம்பமாகும். ஒருவேளை 29 நாட்களாக இருப்பின், முஹர்ரம் 1 ம் தேதி ஆகஸ்ட் 9 திங்கள் கிழமை வரும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் பிறை பார்ப்பதைப் பொறுத்தே இது முடிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்குப் போன்றே தனியார் துறை ஊழியர்களுக்கும் மனித வள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறையை ஆகஸ்ட் 12 ம் தேதி என குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் குடியிருப்பளர்கள் அடுத்த வார இறுதியில் நீண்ட விடுமுறையைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.