ADVERTISEMENT

UAE: விசிட்டில் வரும் வெளிநாட்டினர் வருகைக்கு முன் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன..??

Published: 15 Aug 2021, 2:35 AM |
Updated: 15 Aug 2021, 2:49 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியின் பெரும்பாலான பொது இடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 20 முதல் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் விசிட்டர்களின் சர்வதேச தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்கும் செயல்முறையை அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.

இக்குழு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளிநாடுகளில் இருந்து வரும் விசிட்டர்களுக்கான தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்கும் செயல்முறை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருவதற்கான பயண நடைமுறைகளில் மாற்றம்..!! புதிய வழிமுறைகளை வெளியிட்ட பேரிடர் மேலாண்மைக் குழு..!!

இந்த புதிய செயல்முறையானது அபுதாபி வரும் விசிட்டர்களுக்கு அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் பச்சை நிலையை (green status) பெற உதவுகிறது. விசிட்டில் வருபவர்கள் பின்வரும் வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
அபுதாபிக்கு புறப்படுவதற்கு முன்:

> விசிட்டர்கள் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையத்தின் பதிவு வருகை (Register Arrivals) பிரிவில் பதிவு செய்ய வேண்டும் (ICA)

> பதிவு வருகை படிவத்தை (Register Arrival form) பூர்த்தி செய்யவும்

> சர்வதேச தடுப்பூசி சான்றிதழைப் பதிவேற்றவும்

> பின்னர் அவர்கள் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் உள்ளிட்ட SMS பெறுவார்கள்.

அபுதாபி வந்தவுடன்:

> விசிட்டர்கள் விமான நிலையத்திலோ அல்லது ICA ஆப் அல்லது இணையதளத்திலோ ஒரு ஒருங்கிணைந்த அடையாள எண்ணை (UID) பெறுவார்கள்.

> ICA பதிவுக்காக அல்லது PCR சோதனைக்காக பயன்படுத்தப்படும் UID மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அவர்கள் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

> அல்ஹோஸ்ன் ஆப் பதிவு செயல்முறையை முடிக்க அவர்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெறுவார்கள்.

> அதன் பின்னர் இந்த அப்ளிகேஷன் விசிட்டில் வந்திருப்பவரின் தடுப்பூசி நிலை, தடுப்பூசி தகவல், சோதனை முடிவுகள் மற்றும் பயண சோதனை தேவைகளை சரிபார்த்து நேரடி QR குறியீட்டைப் பயன்படுத்த அனுமதிக்கும்.