ADVERTISEMENT

அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் 15 மில்லியன் திர்ஹம்ஸை தட்டிச் சென்ற இந்தியர்..!!

Published: 4 Aug 2021, 10:15 AM |
Updated: 4 Aug 2021, 10:32 AM |
Posted By: admin

அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் 3 ம் தேதி நடைபெற்று வரும் பிக் டிக்கெட்டிற்கான ரேஃபிள் டிரா இந்த மாதம் ஆகஸ்ட் 3 செவ்வாய்க்கிழமை நடந்தது.

ADVERTISEMENT

அதில் இந்தியரான சனூப் சுனில் 15 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை வென்றுள்ளார்.

சுனில் கடந்த ஜூலை 13 அன்று 183947 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவை தொகுத்து வழங்கும் ரிச்சர்ட் அவர் தொலைபேசி எண்ணிற்கு பல முறை முயற்சித்தும் ஒழுங்கான பதில் இல்லாததால் அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து அழைப்பு விடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுனிலைத் தொடர்ந்து அபுதாபியில் வசிக்கும் ஜான்சன் குஞ்சுகுஞ்சு இரண்டாவதாக வெற்றி பெற்று 1 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுருக்கிறார். இவர் 122225 என்ற எண் கொண்ட டிக்கெட்டை ஜூலை 16 அன்று வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT