ADVERTISEMENT

அமீரகத்திற்கு செல்லும் இண்டிகோ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!!

Published: 19 Aug 2021, 9:17 AM |
Updated: 19 Aug 2021, 9:29 AM |
Posted By: admin

இந்திய விமான நிறுவனமான இண்டிகோ ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களை ஒரு வாரத்திற்கு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தொழில்துறை சார்ந்தவர்களின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைவதற்கான பயண சோதனை விதிமுறைகளை மீறிய ஒரு சில பயணிகளை விமான நிறுவனம் அழைத்துச் சென்றது இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக அமீரகம் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதில், “செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அனைத்து இண்டிகோ விமானங்களும் ஆகஸ்ட் 24, 2021 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாங்கள் எங்கள் அனைத்து பயணிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம், நாங்கள் மீண்டும் சேவைகளைத் தொடங்கியவுடன் பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது ரத்து செய்யப்பட்ட விமானத்தில் முன் பதிவு செய்தவர்களுக்கு வேறு விமானங்களில் பயணிப்பதற்கு உண்டானவற்றை செய்து அவர்களுக்கு ஆதரவளிப்போம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT