ADVERTISEMENT

UAE: உலகின் மிகப் பெரிய அகுவாரியத்துடன் பிரமாண்டமாய் கட்டப்பட்டுவரும் “Sea World Abudhabi”..!!

Published: 13 Aug 2021, 1:30 AM |
Updated: 13 Aug 2021, 2:29 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை அதிகம் கொண்டிருக்கும் யாஸ் தீவில் தற்போது புதிதாக மேலும் ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு தளம் பார்வையாளர்களுக்காக நிறுவப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

‘சீ வேர்ல்ட் அபுதாபி’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய கடல்வாழ் பூங்கா மற்றும் கடல் உயிரின ஆராய்ச்சி மையத்தின் கட்டுமான பணிகளானது 64 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இது அடுத்த வருடம் 2022 ஆம் ஆண்டு பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்றும் யாஸ் தீவின் டெவெலப்பரான மிரால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சீ வேர்ல்ட் பார்க்ஸ் & என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்துடன் இனைந்து உருவாக்கப்பட்டு வரும் இந்த சீ வேர்ல்ட் அபுதாபியானது யாஸ் தீவின் சமீபத்திய மெகா மேம்பாட்டு திட்டங்களின் ஒன்றாகவும், மேலும் அடுத்த தலைமுறை கடல் வாழ் உயிரினங்களின் தீம் பார்க்குகளை கொண்ட இடமாகவும் திகழும் என்றும் மிரால் நிறுவனம் கூறியுள்ளது.

ஐந்து உட்புற நிலைகளில் 183,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகும் இந்த சீ வேர்ல்ட் அபுதாபி எனும் கடல்வாழ் பூங்காவனது முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் பட்சத்தில், இதுவே உலகின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான கடல் வாழ் உயிரினங்களின் அகுவாரியமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 25 மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்படவுள்ள இந்த அகுவாரியத்தில் சுறாக்கள், மீன் வகைகள், கடல் ஆமைகள் உட்பட 68,000 க்கும் அதிகமான கடல் விலங்குகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மிராலின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அப்தல்லா அல் ஜாபி கூறியதாவது, உலகின் அடுத்த கடல்சார் மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை கவனித்துக்கொள்ள இந்த அடுத்த தலைமுறை கடல் வாழ் பூங்காவை நிறுவுவதற்கு சீ வேர்ல்ட் பார்க்ஸ் & என்டர்டெயின்மென்ட் உடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இதுவே ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது கடல்வாழ் உயிரினம் சார்ந்த திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆராய்ச்சி மையம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் இருந்து அதிகளவிலான சுற்றுலாவாசிகளை ஆண்டு தோறும் கவர்ந்து வரும் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி, யாஸ் வாட்டர்வேர்ல்ட், வார்னர் பிரதர்ஸ் வேர்ல்ட் அபுதாபி மற்றும் CLYMB அபுதாபி ஆகிய பிரமாண்டமான பொழுதுபோக்கு தளங்களை தொடர்ந்து தற்போது சீ வேர்ல்ட் அபுதாபியும் யாஸ் தீவின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றாக இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.