ADVERTISEMENT

பல மாதங்களுக்குப் பிறகு அமீரகத்தில் 1,000 க்கும் கீழ் பதிவாகியுள்ள கொரோனா தொற்று..!!

Published: 24 Aug 2021, 1:51 PM |
Updated: 24 Aug 2021, 1:51 PM |
Posted By: admin

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கொரோனா தொற்றானது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கிலேயே பதிவாகிய நிலையில் கடந்த ஒரு நாளில் கொரோனா தொற்றானது குறைந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரக அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பலனாக இந்த தொற்று வீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2021) புதிதாக 990 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 711,428 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,026 அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 1,675 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 694,260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT