கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இலவச தடுப்பூசி பிரச்சாரத்தின் விளைவாக கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகம் குறைவான எண்ணிக்கையிலேயே ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றைப்பதிவு செய்து வருகிறது.
இதில் செவ்வாய்க்கிழமை பல மாதங்களுக்குப் பிறகு 1,000 க்கும் குறைவான நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதன்கிழமையும் குறைவான நோய்த்தொற்றுக்களே பதிவாகியுள்ளன.
அதன்படி, அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, ஆகஸ்ட் 25, 2021) புதிதாக 983 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 712,411 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,028 அதிகரித்துள்ளது.
இன்றைய நாளில் மட்டும் 1,583 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 695,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமீரகத்தின் பல்வேறு பொது இடங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.