ஐக்கிய அரபு அமீரகம் இன்று பல நாட்களுக்குப் பிறகு குறைவான கொரோனா நோய்த்தொற்றைப் பதிவு செய்துள்ளது.
அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2021) புதிதாக 1,287 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 696,906 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,988 அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 1,413 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 674,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கொரோனாவின் இரண்டாம் அலைப் பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு அமீரகம் பயணத்தடையை அறிவித்தது.
இத்தடையானது கடந்த வாரம் சற்று தளர்த்தப்பட்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் உட்பட சில குறிப்பிட்ட பிரிவினர் அமீரகம் பயணிக்க அனுமதி அளித்து அதன்படி ஆகஸ்ட் 5 முதல் குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பி வருகின்றனர்.