அமீரக செய்திகள்

UAE: இலவச விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் தங்குமிடம் கிடைக்க ஓர் அரிய வாய்ப்பு..!! குடியிருப்பாளர்கள் இதை செய்தால் மட்டும் போதும்..!!

இலவச விமான டிக்கெட்டுகளுடன் அமீரகத்திற்கு வந்து தங்கி சுற்றிப்பார்க்க விரும்பும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை கொண்டிருக்கிறீர்களா..??

ஒரு புதிய போட்டியை அறிமுகப்படுத்துவதன் மூலம் விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்களுடன் அபுதாபி குடியிருப்பாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அபுதாபிக்கு வரவழைக்க ஒரு அரிய வாய்ப்பை அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை வழங்குகிறது.

அபுதாபி (DCT அபுதாபி) கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டி ‘Time is Now’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இது அபுதாபியின் கண்கவர் அடையாளங்களைக் காண்பிப்பதையும், வருடத்தின் இந்த சிறந்த வானிலையில் அபுதாபியைப் பார்வையிடவும் நல்ல ஒரு அனுபவத்தைப் பெற மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

போட்டியில் பங்கேற்பது எப்படி..??

இந்த போட்டியானது அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்த போட்டியில் பங்கேற்க, அபுதாபியில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை படம் பிடித்து வைத்திருக்கும் அபுதாபி குடியிருப்பாளர்கள் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களை தங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர வேண்டும். அவர்கள் அதில் @VisitAbuDhabi ஐ டேக் செய்து, #InAbuDhabi #TimeIsNow ஹேஷ்டேக்குகளுடன், அபுதாபிக்கு அழைத்து வர விரும்பும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் பெயர்கள் அல்லது சமூக ஊடக பக்கத்தை பயன்படுத்த வேண்டும்.

போட்டியில் வெல்பவர்களுக்கான பரிசு

இந்த போட்டியில் வெற்றி பெறும் நான்கு அதிர்ஷ்டசாலிகள் விமான டிக்கெட்டுகளையும், அபுதாபியின் கண்கவர் ஹோட்டல்கள் ஒன்றில் ஐந்து நாட்கள் தங்குவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

செப்டம்பர் 20 திங்கள் முதல் அக்டோபர் 2 வரை ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு முறை @VisitAbuDhabi இன் சமூக ஊடகக் பக்கத்தில் ஒரு வெற்றியாளர் நேரடியாக அறிவிக்கப்படுவார்.

சுற்றுலாவுக்கான உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருப்பதில் அபுதாபி முன்னணியில் உள்ளது. உலகளவில் அபுதாபி சுற்றுலாவாசிகள் வந்து பார்வையிடுவதற்கான பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!