அமீரக செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் துவங்கப்பட்டுள்ள துபாய், அபுதாபி இடையிலான பேருந்து சேவை..!! RTA தகவலால் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!!

அமீரகத்தில் கொரோனா பாதிப்பால் இடைநிறுத்தப்பட்டிருந்த துபாய், அபுதாபி இடையிலான இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் தற்பொழுது மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இந்த நகரங்களுக்கு இடையேயான E101 பேருந்து சேவை துபாயில் உள்ள இப்னு பட்டுடா பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, அபுதாபியில் உள்ள சென்ட்ரல் பேருந்து நிலையத்திற்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது.

RTA-வின் பொதுப் போக்குவரத்து முகமை திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி கூறுகையில், “இரண்டு எமிரேட்டுகளுக்கிடையேயான வெகுஜன போக்குவரத்து வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கும் பயணிகளின் சீரான இயக்கத்திற்கும் இந்த பாதை மிகவும் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.

முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உட்பட அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு RTA பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

அபுதாபிக்கு பயணம் செய்பவர்கள் பின்வரும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவை:

>> தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தங்கள் AlHosn செயலியில் கிரீன் ஸ்டேடஸ் மற்றும் ஒரு ‘E’ அடையாளம் அல்லது ஸ்டார் குறியீடு வைத்திருக்க வேண்டும்.

>> தடுப்பூசி போடப்படாத நபர்கள் எதிர்மறை PCR சோதனை முடிவைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் அபுதாபிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

>> பயணிகள் தொடர்ச்சியாக இரண்டு முறை அபுதாபிக்குள் நுழைய DPI சோதனை முடிவுகளைப் பயன்படுத்தக்கூடாது.

அபுதாபி சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விசிட்டர்களுக்கான நுழைவு விதிகளை தளர்த்தியது.

அபுதாபிக்குள் நுழைந்த பிறகு, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாவாசிகளுக்கு மேலும் சோதனை தேவையில்லை.

எதிர்மறை PCR முடிவுடன் தடுப்பூசி போடாமல் வருபவர்கள் அபுதாபிக்குள் நுழைந்த நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் கூடுதல் சோதனைகளை எடுக்க வேண்டும்.

DPI சோதனை முடிவுகளுடன் நுழைந்தவர்கள் மூன்றாவது மற்றும் ஏழாவது நாட்களில் PCR சோதனைகளை எடுக்க வேண்டும்.

கூடுதலாக, பல பொது இடங்கள் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

இவற்றில் ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் ஷாப்பிங் சென்டருக்குள் இல்லாத மற்ற சில்லறை விற்பனை நிலையங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் தீம் பூங்காக்கள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!