ADVERTISEMENT

துபாய் வரும் பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடியை அறிவித்த எமிரேட்ஸ்..!!

Published: 10 Sep 2021, 4:50 PM |
Updated: 10 Sep 2021, 5:01 PM |
Posted By: admin

துபாயின் எக்ஸ்போ 2020 துவங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்புகள் எக்ஸ்போ 2020 நிகழ்வுடன் ஒத்துபோகும் விதமாக, செப்டம்பர் 28, 2021 ஆம் தேதியிலிருந்து மார்ச் 31, 2022 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்திற்குள், பயணிகள் துபாய்க்கு பயணிக்க முன்கூட்டியே விமானங்களை முன்பதிவு செய்யும் போது விமான பயண கட்டணத்தில் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தள்ளுபடி குறித்து எமிரேட்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “செப்டம்பர் 28, 2022 முதல் மார்ச் 31, 2022 வரையிலான பயணத் தேதிகளுக்கான இறுதி இலக்காக துபாய்க்கு முன்பதிவு செய்யப்பட்ட எந்தவொரு டிக்கெட்டிலும் இந்த சிறப்பு சலுகை செல்லுபடியாகும். இந்த சிறப்பு சலுகை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 வரையிலான நாட்களில் எமிரேட்ஸ்.காம், எமிரேட்ஸ் கால் சென்டர் அல்லது டிராவல் ஏஜென்சி வழியாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு பொருந்தும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு எக்ஸ்போ 2020 நிகழ்விற்கான ஒரு நாள் இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதே போன்று எமிரேட்ஸின் Skywards உறுப்பினர்களுக்காக ஒரு புதுமையான ‘ஒரு நிமிடத்திற்கு ஒரு மைல்’ எனும் சலுகையை அறிமுகம் செய்திருந்தது.

இதன் மூலம் பயணிகள் அக்டோபர் 1, 2021 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் துபாயில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 Skywards மைல் ரிவார்ட் வழங்கப்படும். எமிரேட்ஸின் இந்த Skywards திட்டத்தில் ஏற்கனவே பதிவு செய்த உறுப்பினர்கள் மற்றும் மார்ச் 31, 2022 க்கு முன்பாக பதிவு செய்யும் புதிய உறுப்பினர்கள் ‘ஒரு நிமிடத்திற்கு ஒரு மைல்’ சலுகையைப் பயன்படுத்தி அதிகபட்சம் 5,000 மைல்கள் வரை ரிவார்டாக பெறலாம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஆகஸ்ட் 1, 2021 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எமிரேட்ஸ் விமான டிக்கெட்டுகளுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் விமான நிறுவனம் அறிவிதித்துள்ளது.

வரும் வாரங்களில், எங்கள் பிரபலமான ‘மை எமிரேட்ஸ் பாஸ்’ தயாரிப்பின் சிறப்பு எக்ஸ்போ பதிப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 வது ஆண்டு விழா கொண்டாட்ட சலுகை, குடும்பங்களுக்கான பிரத்யேக சலுகை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.