ADVERTISEMENT

எந்த எமிரேட் வழங்கிய விசாவாக இருந்தாலும் நீங்கள் துபாய் பயணிக்கலாம்..!! புதிய தகவலைப் பகிர்ந்த எமிரேட்ஸ்..!!

Published: 1 Sep 2021, 1:35 AM |
Updated: 1 Sep 2021, 4:06 AM |
Posted By: admin

துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை குழு தெரிவித்துள்ளதன் படி, அமீரகத்தின் எந்த எமிரேட்டிலும் விசா வழங்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தற்பொழுது துபாயில் வந்திறங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து துபாய் வழங்கிய ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே துபாய் விமான நிலையம் வந்திறங்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ட்விட்டரில் விசா சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்த எமிரேட்ஸ் நிறுவனத்தின் ஆதரவு ஊழியர்கள், ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசாவுடன் துபாய்க்கு பயணிக்கும் பயணிகளுக்கு அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) அல்லது GDRFA ஒப்புதல் தேவை என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

“தற்போதைய புதுப்பித்தலின் படி, அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், புதிதாக வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் அல்லது வேலைவாய்ப்பு விசாக்கள், குறுகிய கால/நீண்டகால விசா, விசிட் விசா, அரைவல் விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு பயணிக்க ஏற்றுக்கொள்ளப்படும்”.

ADVERTISEMENT

“ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசாவுடன் பயணம் செய்யும் பயணிகள் GDRFA அல்லது ICA ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமீரகத்தின் வேறு இடங்களில் விசா வழங்கப்பட்டு தற்பொழுது துபாய் பயணிக்க விரும்புபவர்களுக்கு இந்த புதுப்பிக்கப்பட்ட பயண நடைமுறையானது மகிழ்ச்சியை அளிக்கின்றது.