ADVERTISEMENT

வெறும் 300 திர்ஹம்ஸில் இந்தியா பயணிக்கலாம்..!! சிறப்பு விமான கட்டணத்தை அறிவித்துள்ள ஏர் அரேபியா..!!

Published: 20 Sep 2021, 1:08 PM |
Updated: 20 Sep 2021, 1:11 PM |
Posted By: admin

ஷார்ஜாவை மையமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனமான ஏர் அரேபியா இந்தியா செல்லும் பயணிகளுக்காக சிறப்பு தள்ளுபடி விமானக் கட்டணத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

விமான நிறுவனம் அறிவித்துளதன்படி, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பயணிக்க 300 திர்ஹம் முதல் 600 திர்ஹம் வரை மட்டுமே ஒரு வழி கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மிக குறைந்த விமானக் கட்டணம் 11 இந்திய நகரங்களுக்கு கிடைக்கிறது.

ADVERTISEMENT

அதில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சி செல்லும் விமானங்களுக்கு 300 திர்ஹம் ஒரு வழி கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் காலிகட் மற்றும் சென்னைக்கு பயணிப்பவர்கள் 310 திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் திருவனந்தபுரம் (320 திர்ஹம்), அகமதாபாத் (350 திர்ஹம்), கோயம்புத்தூர் (398 திர்ஹம்), பெங்களூரு (450 திர்ஹம்) மற்றும் கோவா (600 திர்ஹம்) ஆகிய நகரங்களும் உள்ளன.

ADVERTISEMENT

இந்தியா, இலங்கையிலிருந்து இ-விசாவில் பயணம் செய்யும் பயணிகள் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவுக்கு பயணிக்கும் போது கொரோனா தடுப்பூசி பதிவுகளை காட்ட வேண்டும் என்று ஏர் அரேபியா இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்துள்ளது.

புதிதாக வழங்கப்பட்ட இ-விசாக்களுடன் இந்த இரண்டு எமிரேட்களுக்கும் வரும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு முன்பு ICA-வில் பதிவு செய்தருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.