ADVERTISEMENT

UAE: இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் இரு நீண்ட நாட்கள் விடுமுறை..!! எப்போது..??

Published: 13 Sep 2021, 1:53 PM |
Updated: 13 Sep 2021, 1:55 PM |
Posted By: admin

நடப்பு ஆண்டான 2021 ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அமீரகத்தில் இந்த ஆண்டில் இன்னும் இரண்டு நீண்ட விடுமுறை நாட்கள் வர இருக்கின்றன.

ADVERTISEMENT

இந்த ஆண்டில் கடந்த மே 11 முதல் 15 வரை குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு ஐந்து நாள் விடுமுறை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நீண்ட வார இறுதி விடுமுறை ஈத் அல் அதாவை முன்னிட்டு ஜூலை மாதம் 19, திங்கட்கிழமை முதல் ஜூலை 24 சனிக்கிழமை வரை என ஆறு நாட்கள் இருந்தது.

பின் இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு குடியிருப்பாளர்களுக்கு மூன்று நாள் நீண்ட விடுமுறை கிடைத்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து இனி அமீரகத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 21 வியாழக்கிழமை முதல் அக்டோபர் 23 சனிக்கிழமை வரை என வார இறுதி நாட்களில் தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் 2021 ம் ஆண்டில் விடுமுறை நாட்களின் நான்கு நாட்கள் கொண்ட கடைசி விடுமுறை, டிசம்பர் 1, புதன்கிழமை முதல் டிசம்பர் 4 சனிக்கிழமை வரை அமீரக தியாகிகளின் நினைவு நாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தன்று கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

ADVERTISEMENT