ADVERTISEMENT

அமீரகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..!! கடந்த ஒரு நாளில் 313 பேருக்கு மட்டுமே தொற்று..!!

Published: 20 Sep 2021, 1:43 PM |
Updated: 20 Sep 2021, 2:18 PM |
Posted By: admin

அமீரகத்தில் கொரோனா பாதிப்பானது கடந்த சில நாட்களாகவே மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கள்கிழமை, செப்டம்பர் 20, 2021) புதிதாக 313 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 733,003 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,077 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய நாளில் மட்டும் 409 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 724,855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT