ADVERTISEMENT

Covid19: ஒரு வருடத்திற்குப் பின் மிகவும் குறைவான தொற்றைப் பதிவு செய்த அமீரகம்..!! உயிரிழப்பும் இல்லை..!!

Published: 12 Sep 2021, 12:45 PM |
Updated: 12 Sep 2021, 12:49 PM |
Posted By: admin

கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்குப் பிறகு மிகவும் குறைவான கொரோனா தொற்றைப் பதிவு செய்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு நாளில் கொரோனா பாதித்து எவரும் உயிரிழக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக அமீரகத்தில் இது நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்னர் செப்டம்பர் 2 ம் தேதி அமீரகம் கொரோனாவினால் யாரும் உயிரிழக்கவில்லை என அறிவித்திருந்தது. அதற்கும் முன்னர் கடந்த வருடம் நவம்பர் 14 ம் தேதியன்றுதான் அமீரகம் கொரோனா தொற்றால் அந்த ஒரு நாளில் உயிரிழப்பு ஏற்படவில்லை என அறிவித்தது.

அதே போல் நோய்த்தொற்று பாதிப்பும் கடந்த ஒரு நாளில் 620 பேருக்கே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 785 பேர் கொரோனா பாதித்து குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 728,886 ஆகவும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 719,948 ஆகவும் உள்ளது.

அத்துடன் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2062 ஆக இருக்கின்றது.

ADVERTISEMENT