ADVERTISEMENT

UAE: கண்கவர் வானவேடிக்கை, பல்வேறு சிறந்த ஆஃபர், ப்ரொமோஷன் என துபாயில் களைகட்டவிருக்கும் தீபாவளி..!!

Published: 25 Oct 2021, 1:53 PM |
Updated: 25 Oct 2021, 1:58 PM |
Posted By: admin

இந்தியர்களின் பண்டிகையில் ஒன்றான தீப ஒளி திருநாளாம் தீபாவளிக்கு இன்னும் ஒரு  சில நாட்களே இருக்கும் நிலையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் தீபாவளியை முன்னிட்டு பொருட்களுக்கு பல்வேறு ப்ரொமோஷன்கள், தள்ளுபடிகளுடன் கண்ணைக் கவரும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த தீபாவளி கொண்டாட்டங்களானது துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை நிறுவனத்தால் (DFRE, Dubai Festivals and Retail Establishment) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களின் (DFRE) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா இது பற்றி கூறுகையில், “துபாயில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டங்கள் துபாய் எவ்வளவு பெரிய மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட நகரம் என்பதையும், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு எவ்வளவு சலுகை உள்ளது என்பதையும் காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நிகழ்வுகள்

கோல்ட் ஆஃபர்

துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமத்துடன் இணைந்து, சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் கோல்டன் தீபாவளி சர்ப்ரைஸ் (Golden Diwali Surprise) மூலம் 100,000 திர்ஹம் மதிப்புள்ள தங்கத்தை ஷாப்பிங் செய்து வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இதற்கான டிராவில் நுழைவதற்கான டிஜிட்டல் ரேஃபிள் கூப்பனைப் பெற, அவர்கள் இந்த டிராவில் பங்கேற்கும் எந்த மாலில் வேண்டுமானாலும் 200 திர்ஹம் செலவிட்டால் போதும்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு சிட்டி ஆஃப் கோல்ட் தீபாவளியை (City of Gold Diwali Glow)முன்னிட்டு சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் 125க்கும் மேற்பட்ட நகை விற்பனை நிலையங்களில் நகைகளை வாங்கும் போது 150,000 திர்ஹம் மதிப்புள்ள கோல்ட் வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேற்கூறியது மட்டுமல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பர்ச்சேஸ்களுக்கு இலவச பரிசுகள், அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நகை வாங்கும் போது 50 சதவீதம் தள்ளுபடி போன்றவையும் வழங்கப்படும். இந்த விற்பனையானது அக்டோபர் 21, வியாழன் முதல் நவம்பர் 13 சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. மேலும் தகவலுக்கு www.dubaicityofgold.com வலைதளத்தைப் பார்வையிடலாம்.

ஃபெஸ்டிவல் பிளாசா

ஜெபல் அலியில் உள்ள ஃபெஸ்டிவல் பிளாசா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு festival reward அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும் போது ஷாப்பிங் செய்பவர்களுக்கு “ஃபெஸ்டிவல் சிட்டி மால்கள் கிஃப்ட் கார்டை” இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சலுகை அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 சனிக்கிழமை வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தி் பாய்ண்ட் (The Pointe on the Palm Jumeirah)

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி உலகின் மிகப்பெரிய நடன நீரூற்றான தி பாம் ஃபவுண்டேனின் கண்கவர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அத்துடன் அங்கிருக்கும் உணவகங்களில் உணவுப் பிரியர்களுக்கு அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 6 சனிக்கிழமை வரை பல்வேறு சிறந்த உணவு வகைகளை சாப்பிடக்கூடிய புதுவித அனுபவம் கிடைக்கும்.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்

தீபாவளிக்கான ப்ரொமோஷனாக துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலுக்கு வருபவர்கள் 300 அல்லது அதற்கு மேற்பட்ட திர்ஹம் செலவழிக்கும் போது டிராவில் நுழைந்து ஹோண்டா அக்கார்ட் EX டர்போ 2021 (Honda Accord EX Turbo 2021) ஐ வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது அக்டோபர் 21 வியாழக்கிழமை தொடங்கி நவம்பர் 13 சனிக்கிழமை வரை நீடிக்கும்.

சிட்டி சென்டர் தேரா

சிட்டி சென்டர் தேராவில், 200 திர்ஹம் மதிப்பில் ஷாப்பிங் செய்பவர்கள் ஜவ்ஹாரா ஜுவல்லரியிடம் இருந்து தங்க நெக்லஸ் அல்லது 100,000 ஷேர் புள்ளிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்தச் சலுகை அக்டோபர் 28 வியாழன் முதல் நவம்பர் 6 சனிக்கிழமை வரை இருக்கும்.

சிட்டி சென்டர் அல் ஷிந்தகா

இங்கு ஷாப்பிங் செய்பவர்களுக்கு சிட்ரோயன் காரை பரிசாக வெல்லும் வாய்ப்பை பெறலாம். வெற்றி பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் 100 திர்ஹம் கடைகளில் அல்லது 200 திர்ஹம் கேரிஃபோரில் பர்சேஸ் செய்திருக்க வேண்டும்.

ஜுமைரா லேக் டவர்

JLT என சொல்லக்கூடிய ஜுமேரா லேக் டவரில், தீபாவளி பஜார் அமைக்கப்பட்டு அதில் குடியிருப்பாளர்கள் விரும்பும் அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படும். 

வானவேடிக்கை

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் தொடங்குவதை முன்னிட்டு வான வேடிக்கை ஜுமேரா கடற்கரையில் சன்செட் மாலுக்குப் பின்னால் அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெறும்.

மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாக ப்ளூவாட்டர்ஸ் வான வேடிக்கை இருக்கும். நவம்பர் 4 வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு அங்கு வான வேடிக்கை நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் நவம்பர் 4 வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு அதன் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தவிருக்கின்றது.

இவற்றுடன் தீபாவளிக்கு குளோபல் வில்லேஜில் சுற்றுலா பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் அக்டோபர் 26 செவ்வாய் முதல் நவம்பர் 13 சனிக்கிழமை வரை ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9:00 மணிக்கு வான வேடிக்கையினை கண்டு களிக்கலாம்.

எக்ஸ்போ 2020

எக்ஸ்போ 2020 தளத்திலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் என அக்டோபர் 29 வெள்ளி முதல் நவம்பர் 4 வியாழன் வரை அல் வாஸ்ல் பிளாசாவில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.