ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தினை ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:
- சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.60 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.80 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
- ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.49 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.69 திர்ஹமாக சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
- டீசல் : அக்டோபர் மாதத்தில் 2.51 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் நவம்பர் மாதம் முதல் லிட்டருக்கு 2.81 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது.
إعلان أسعار الوقود الشهرية: أسعار الوقود لشهر نوفمبر وفقاً للجنة متابعة أسعار الجازولين والديزل في #الإمارات
Monthly Fuel Price Announcement:
November fuel prices released by the #UAE Fuel Price Follow-up Committee. pic.twitter.com/sjT8P6r9Nq— Emarat (امارات) (@EmaratOfficial) October 31, 2021