ADVERTISEMENT

அமீரகத்தில் நாளை மழை வேண்டி சிறப்பு தொழுகை..!! உங்கள் பகுதியில் தொழுகை நேரம் என்ன..??

Published: 11 Nov 2021, 1:02 PM |
Updated: 11 Nov 2021, 1:02 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிகள் நாளை நவம்பர் 12 அன்று மழைக்காக வேண்டி சிறப்பு தொழுகையினை நடத்தவிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்த முடிவானது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், நாடு முழுவதும் சலாத் அல் இஸ்திஸ்கா என்றழைக்கப்படும் மழைக்கான சிறப்பு தொழுகையை மசூதிகள் நடத்துமாறு கடந்த வாரம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAM, அமீரகம் முழுவதும் மழைக்காக நடத்தப்படும் சிறப்பு தொழுகைக்கான நேரங்களை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

ADVERTISEMENT

அபுதாபி: மதியம் 12 மணி

துபாய்: காலை 11.56 மணி

ADVERTISEMENT

ஷார்ஜா: காலை 11.55 மணி

அஜ்மான்: காலை 11.54

உம் அல் குவைன்: காலை 11.54 மணி

ராஸ் அல் கைமா: காலை 11.53 மணி

ஃபுஜைரா: காலை 11.51 மணி

கொர்ஃபக்கான்: காலை 11.51 மணி

அல் அய்ன்: காலை 11.54

அல் தஃப்ரா: மதியம் 12.02

சலாத் அல் இஸ்திஸ்கா எனும் இந்த தொழுகையானது இதற்கு முன்னர் 2020, 2017, 2014, 2011 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.