ADVERTISEMENT

UAE: நவம்பர் மாத 11:11 விற்பனையை முன்னிட்டு 90 சதவீத தள்ளுபடியை அறிவித்த ஈ-காமர்ஸ் நிறுவனங்கள்..!!

Published: 10 Nov 2021, 5:16 PM |
Updated: 10 Nov 2021, 5:35 PM |
Posted By: admin

இந்த வருடத்தின் நவம்பர் மாத 11:11 விற்பனையை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல இ-காமர்ஸ் தளங்கள் 90 சதவீதம் வரை விலை தள்ளுபடியுடன் கூடிய தினசரி ஃபிளாஷ் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

இந்த ஆண்டின் மெகா விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் குறிப்பிட்ட பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத மாதாந்திர கட்டணத் திட்டங்கள், வீடு மற்றும் சமையலறை தயாரிப்புகளுக்கான சலுகைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தயாரிப்புகளில் பிரத்தியேகமான டீல்கள் மூலம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் ஸ்கூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களிலும், குளிர்கால சீசனுக்கு ஏற்றவாறு உள்ள புதிய பேஷன் உடைகளிலும் சலுகைகளை பெறலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையான noon.com நவம்பர் மாதத்தின் 11:11 விற்பனையை நவம்பர் 10 அன்று தொடங்கி நவம்பர் 12 வரை இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த தினங்களில் 80 சதவிகிதம் வரை தள்ளுபடியுடன், முன்னணி கண்ணாடி பிராண்டுகளின் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு தள்ளுபடியையும் பெறலாம் என தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் இயங்கிவரும் மற்றொரு ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனமும் நவம்பர் 10 முதல் 12 வரை 11:11 விற்பனையை அறிவித்துள்ளது. இருப்பினும் அதன் பிரைம் உறுப்பினர்கள் மற்றவர்களை விட ஒரு நாள் முன்னதாகவே சிறப்பு தள்ளுபடிகளை பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. அமேசான் தளத்தில் வாங்குபவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் கிட்சன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொருட்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்று அமீரகத்தில் உள்ள மற்றுமொரு முன்னணி வர்த்தக தளமான கார்ட்லோ நிறுவனமும் 3-நாள் 11:11 விற்பனை நவம்பர் 10 முதல் 12 வரை அறிவித்துள்ளது. கார்ட்லோவின் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் முதல் வாசனை திரவியங்கள் மற்றும் கடிகாரங்கள் வரை அனைத்து தயாரிப்புகளிலும் வரையறுக்கப்பட்ட சலுகைகள் இருக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் மாதத்தில் 11:11 விற்பனையை தவிர மேலும் இரண்டு சிறப்பு விற்பனையும் நடைபெறவுள்ளது. நவம்பர் மாதத்தில் ஒயிட் ஃப்ரைடே (white friday) விற்பனையை முன்னிட்டு நவம்பர் 22 முதல் 28 வரை 2,500 பிரீமியம் பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

அடுத்ததாக சைபர் மண்டே (cyber monday) தினத்தை முன்னிட்டு நவம்பர் 29 அன்று ஷாப்பிங் செய்பவர்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பிராண்டுகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.