அமீரக சட்டங்கள்

அமீரக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இந்த விதிமீறல்களுக்கு 3,000 திர்ஹம் அபராதத்துடன் கூடுதல் தண்டனைகள்.. என்னென்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிமீறல்களுக்கான அபராதம் விதிக்கப்பட்டாலும் சில குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு 3,000 திர்ஹம் அல்லது அதற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, பெரியளவிலான விதிமீறல்களுக்கு ஓட்டுநர் உரிமத்தில் கருப்பு புள்ளிகள் (Black points) மற்றும் ஒரு வருடம் வரை வாகனம் பறிமுதல் செய்யப்படும் அளவுக்கு தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைந்த கூட்டாட்சி போக்குவரத்து சட்டம் துபாயில் வாகன ஓட்டிகளின் மீறல்களுக்கு பின்வரும் அபராதங்களை விதிக்கிறது. அவை

1. இலகுரக வாகனம் மணிக்கு 80 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேக வரம்பைத் தாண்டினால் 3,000 திர்ஹம் அபராதம், 23 பிளாக் ட்ராஃபிக் புள்ளிகள், வாகனம் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் மற்றும் இதே காலத்திற்கு உரிமம் இடைநிறுத்தப்படும்.

2. இலகுரக வாகனத்திற்கு செல்லுபடியாகும் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் 3,000 திர்ஹம் அபராதம், 23 பிளாக் டிராபிக் புள்ளிகள் மற்றும் வாகனம் 90 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்

3. ஓட்டுநர் மற்றும் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கனரக வாகனத்தை ஓட்டினால் 3,000 திர்ஹம் அபராதம் மற்றும் உரிமம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படும்

4. ரெட் சிக்னலை கடந்து கனரக வாகனத்தை ஓட்டினால் 3,000 திர்ஹம் அபராதம் மற்றும் உரிமம் ஓராண்டுக்கு இடைநீக்கம்

5. கனரக வாகனம் விபத்துக்களை ஏற்படுத்தினால் 3,000 திர்ஹம் அபராதம் மற்றும் உரிமம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படும்

6. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட leisure bike-ஐ ஓட்டினால் 3,000 திர்ஹம் அபராதம் மற்றும் 90 கருப்பு போக்குவரத்து புள்ளிகள்

7. மூன்றாவது விதிமீறலைத் தொடர்ந்து அதிகபட்ச பிளாக் டிராஃபிக் புள்ளிகள் பெற்ற பிறகு லைசென்ஸை ஒப்படைக்கத் தவறினால் 3,000 திர்ஹம் அபராதம்

8. ஒரு டிரக் அதன் லோடினை மூடாமல் சென்றால் 3,000 திர்ஹம் அபராதம்

9. கனரக வாகனத்தில் இருந்து பொருட்கள் சாலையில் கொட்டினால் 3,000 திர்ஹம் அபராதம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!