ADVERTISEMENT

ரஷ்ய அதிபருக்கு ஃபோன் செய்த அபுதாபி இளவரசர்…!! உக்ரைன் பிரச்சனையில் அமைதியான தீர்வு காண வலியுறுத்தல்..!!

Published: 2 Mar 2022, 6:03 PM |
Updated: 2 Mar 2022, 6:10 PM |
Posted By: admin

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பல பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த உரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Opec) உடனான ரஷ்யாவின் ஒத்துழைப்பின் அடிப்படையில் எரிசக்தி சந்தை மேம்பாடுகள் மற்றும் எரிசக்தி சந்தை ஸ்திரத்தன்மையை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலவரங்கள் குறித்தும் அந்த தொலைபேசி அழைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மக்களின் நலன்களையும் தேசியப் பாதுகாப்பையும் பேணும் வகையில் இந்த உக்ரைன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஷேக் முகமது அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

தற்போதைய நெருக்கடிக்கு நிலையான அரசியல் தீர்வைக் கண்டறிய ஐக்கிய அரபு அமீரகம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அதன் ஒருங்கிணைப்பைத் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷேக் முகமது அவர்களின் புட்டினுடனான தொலைபேசி அழைப்பு, பட்டத்து இளவரசர் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அழைப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக வந்தது என்றும், அதில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் ஆகியோரிடமும் அவர் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT