ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு சிறைகைதிகளுக்கு விடுதலை அளித்த அஜ்மான் ஆட்சியாளர்…!!

Published: 30 Mar 2022, 5:25 PM |
Updated: 30 Mar 2022, 5:28 PM |
Posted By: admin

அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுவைமி அவர்கள், அமீரகத்தில் சிறையில் இருந்த தண்டனைக் காலத்தில் நல்ல நடத்தையை வெளிப்படுத்திய பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 82 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவானது கைதிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் அவர்களின் குடும்பங்களின் துன்பத்தைப் போக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக அஜ்மானின் ஆட்சியாளரின் சைகையாகும்.

இது மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதையும் சமூக ஒற்றுமையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதே போன்று துபாய், ஷார்ஜா ஆட்சியாளர்களும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT