தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NCEMA) இணங்க, துபாயில் உள்ள நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு, பல கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள் பிப்ரவரி 26 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
– ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்டுகள் போன்ற துபாயில் உள்ள அனைத்து பொது உட்புற இடங்களிலும் முக கவசங்களை அணிவது கட்டாயமாக உள்ளது.
– கடற்கரைகள், பொதுப் பூங்காக்கள் போன்ற வெளிப்புறப் பகுதிகளுக்கு முக கவசங்களை அணிய தேவையில்லை. விருப்பப்பட்டால் போட்டுக்கொள்ளலாம்.
– கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாவிட்டால் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை
– புதுப்பிக்கப்பட்ட பயண நெறிமுறைகளில், துபாய் செல்லும் பயணிகள் QR குறியீட்டைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். PCR சோதனை முடிவு தேவையில்லை.
– தடுப்பூசி போடப்படாத துபாய் செல்லும் பயணிகள், கடந்த 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவு அல்லது பயணத் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெறப்பட்ட QR குறியீட்டைக் கொண்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.