அமீரக சட்டங்கள்

UAE: பேருந்து பயணத்தில் சாப்பிட்டாலோ, குடித்தாலோ 200 திர்ஹம் அபராதம்..!! அபராத பட்டியலை வெளியிட்ட ITC..!!

அபுதாபியில் உள்ள அதிகாரிகள், பொதுப் பேருந்தில் பயணிக்கும் மக்கள் நாகரீகமான நடத்தையை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர். ட்விட்டரில் அபுதாபியின், ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) பொது போக்குவரத்து பயனர்களால் அடிக்கடி செய்யப்படும் மீறல்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. விதி மீறல்களுக்கு 100 முதல் 500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITC வெளியிட்டுள்ள அபராதங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை

500 திர்ஹம் அபராதம்

சக பயணிகளை அவமரியாதை செய்தால் அல்லது அவர்களுடன் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

டிரைவரிடம் கூச்சலிடுவதற்கும், கவனத்தை திசை திருப்புவதற்கும் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதே போல பேருந்து பயனர்கள் தங்கள் போக்குவரத்து அட்டைகளை மற்றவர்களுக்கு விற்றதற்காக 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம்.

200 திர்ஹம் அபராதம்

பயணிகள் தங்கள் பயணத்தின் போது சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது சுவிங்கம் போன்றவற்றை மெல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை. மீறினால் இந்த குற்றத்திற்கு 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் புகைபிடிப்பதற்கும் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தாமல் பயணிப்பவர்களுக்கும் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

100 திர்ஹம் அபராதம்

பேருந்துகளில் கூர்மையான பொருட்கள் அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படாது. இதை மீறி எடுத்துச் சென்றால் இந்த குற்றத்திற்காக 100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

கூடுதலாக, மாற்று திறனாளிகளுக்கான முன்னுரிமை இருக்கைகள் அல்லது நியமிக்கப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்துவதற்கு பயணிகளுக்கு 100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!