ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்வு..!! யாரெல்லாம் உணர்ந்தீர்கள்..??

Published: 17 Mar 2022, 8:23 PM |
Updated: 17 Mar 2022, 8:27 PM |
Posted By: admin

ஈரானில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகளானது ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களால் உணரப்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இது நாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனை விவரிக்கையில் வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சுமார் 5 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்ததாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஒரு நபர் கூறுகையில், “நான் ஷார்ஜாவில் நில நடுக்கத்தை உணர்ந்தேன். இது மிகவும் குறுகிய நேரமாக இருந்தது. சிலர் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்று கூறினார். மற்றொருவர் சில நொடிகள் அதை உணர்ந்ததாக கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வருடத்தில் பல முறை சிறிய நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது. இருந்தபோதிலும் அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்று NCM அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார்.

ADVERTISEMENT

மேலும் இந்த ஆண்டில் நாட்டில் நில அதிர்வு உணரப்படுவது இதுவே முதல் நிகழ்வாகும். கடந்த ஆண்டு, அமீரகத்தில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பரில், ஈரானில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டன. அப்போது, சில கட்டிடங்களில் உள்ள நபர்கள் அவர்களின் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர்.

NCM இன் அதிகாரியான அல் ஷம்ஸி, முன்பு நில நடுக்கம் எவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை விளக்கினார். அவர் கூறுகையில், “இந்த அதிர்வுகள் எப்போதுமே மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். ஆனால் அவை போதுமான வலிமையுடன் இருந்தால் சில சமயங்களில் உணரப்படலாம்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “ஐக்கிய அரபு அமீரகம் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது, ஆனால் அவை தேசத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, கவலைப்பட ஒன்றுமில்லை.” என்றும் கூறியிருந்தார்.

அத்துடன் நிலநடுக்கத்தை உணரும்போதெல்லாம் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் வீட்டிலோ அல்லது வெளியிலோ பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அவர் அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.