அமீரக செய்திகள்

அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் மூடப்படும் முக்கிய சாலைகளின் விபரங்கள்..!! மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்….

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார இறுதியில் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்களின் முக்கிய சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வார இறுதியில் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால், வெளியே செல்ல திட்டமிடும் பயணிகள் மூடல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் மூடப்பட்ட விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

அபுதாபி

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC), தங்கள் சமூக ஊடக சேனல்கள் மூலம் முக்கிய சாலைகள் மூடப்படுவதை அறிவித்துள்ளது, மாற்றுப்பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

ஷேக் கலீஃபா பின் சையத் சர்வதேச சாலை (E11)

அல் தஃப்ராவில் உள்ள குவைஃபாத் நோக்கி செல்லும் ஷேக் கலீஃபா பின் சையத் சர்வதேச சாலையின் (E11) வலது பாதை, வாகன ஓட்டிகளுக்கு, டிசம்பர் 9, சனிக்கிழமை (அதிகாலை 12:00) முதல் டிசம்பர் 14, வியாழன் (காலை 5:00 மணி) வரை மூடப்படும் என்று ITC அறிவித்துள்ளது.

அல் சாதா ப்ரிட்ஜின் பகுதியளவு சாலை மூடல் – அபுதாபி

அபுதாபியின் அல் சாதா ப்ரிட்ஜ் டிசம்பர் 9 முதல் 31 வரை தொடர்ந்து நான்கு வார இறுதி நாட்களுக்கு பகுதியளவு மூடப்படும். இந்த திட்டம் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படும், ஒவ்வொன்றும் ஒரு வார இறுதியில் நீடிக்கும், மேலும் இரு திசைகளிலும் போக்குவரத்தைப் பாதிக்கும்.

முதல் கட்டம் : ஷேக் சயீத் பிரிட்ஜில் இருந்து அபுதாபி செல்லும் பாதை – (டிசம்பர் 9 – 11)

டிசம்பர் 9, சனிக்கிழமை மதியம் 12:00 மணி முதல் டிசம்பர் 11 திங்கள் காலை 5:30 மணி வரை இரண்டு வலது பாதைகள் மூடப்படும். இடது புறமுள்ள இரண்டு பாதைகள் திறந்தே இருக்கும்.

இரண்டாம் கட்டம்: ஷேக் சயீத் பிரிட்ஜில் இருந்து அபுதாபி செல்லும் பாதை – (டிசம்பர் 16 – 18)

இடது புறமுள்ள மூன்று பாதைகள் டிசம்பர் 16 சனிக்கிழமை மதியம் 12:00 மணி முதல் டிசம்பர் 18 திங்கட்கிழமை காலை 5:30 மணி வரை மூடப்படும் மற்றும் வலது புறமுள்ள இரண்டு பாதைகள் திறந்தே இருக்கும்.

 மூன்றாம் கட்டம்: அபுதாபியில் இருந்து கார்னிச் நோக்கிய சாலை – (டிசம்பர் 23 – 25)

டிசம்பர் 23 சனிக்கிழமை மதியம் 12:00 மணி முதல் டிசம்பர் 25 திங்கள் காலை 5:30 மணி வரை வலது புறமுள்ள இரண்டு பாதைகள் மூடப்பட உள்ளன. அதேசமயம், இடது புறமுள்ள இரண்டு பாதைகள் திறந்தே இருக்கும்.

 நான்காம் கட்டம் 4: அபுதாபியில் இருந்து கார்னிச் நோக்கிய சாலை (டிசம்பர் 30 – 31)

டிசம்பர் 30 சனிக்கிழமை மதியம் 12:00 மணி முதல் டிசம்பர் 31 ஞாயிறு மதியம் 12:00 மணி வரை மூன்று இடது பாதைகள் மூடப்படும் மற்றும் இரண்டு வலது பாதைகள் திறந்தே இருக்கும்.

அல் கலீஜ் அல் அரபி மற்றும் ஷக்பூத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்ஸ்

அபுதாபியில் உள்ள அல் கலீஜ் அல் அரபி மற்றும் ஷாக்பவுத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்களில் டிசம்பர் 8, 2023 வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 11, 2023 திங்கட்கிழமை வரை பகுதியளவு சாலை மூடல்கள் அமலில் இருக்கும். அதேபோல், டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணி முதல் டிசம்பர் 11 திங்கள் வரை காலை 5:00 மணி வரை கார்னிச் நோக்கிய மூன்று பாதைகளும், ஹுதைரியாத் ஐலேண்ட் நோக்கி இடது புறம் இருக்கும் பாதைகளில் இரண்டு பாதைகளும் மூடப்படும்.

அல் அய்னில் சாலை மூடல்:

ஹில்லி-அல் அய்னில் உள்ள பனியாஸ் மற்றும் அல் ஃபலாஹ் ஸ்ட்ரீட் இரண்டும் டிசம்பர் 9 சனிக்கிழமை தொடங்கி டிசம்பர் 31 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று வாரங்களுக்கு மூடப்படும். எனவே, மூடப்படும் காலத்திற்கு போக்குவரத்து சாலையின் எதிர்புறம் திருப்பி விடப்படும்.

அபுதாபி – அல் அய்ன் டிரக் சாலை

அபுதாபி – அல் ஐன் டிரக் சாலையில் (E30) டிசம்பர் 8 முதல் டிசம்பர் 11, 2023 வரை பகுதியளவு சாலையை மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 8, 2023, திங்கட்கிழமை காலை 5 மணி முதல் டிசம்பர் 11, 2023 வரை வளைவில் வலது பாதையை மூடுவது வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அல் ஷஹாமாவை நோக்கிச் செல்லும் போக்குவரத்தைப் பாதிக்கும்.

துபாயில் 9 மாத போக்குவரத்து மாற்றம்

யாலாய்ஸ் ஸ்ட்ரீட் ரவுண்டானா சந்திப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், டிசம்பர் 4, 2023 முதல், யாலாய்ஸ் ஸ்ட்ரீட் D57 இல் ஒன்பது மாதத்திற்கு போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்படும்.

 

இந்த மூடல் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் மற்றும் யலாயிஸ் ஸ்ட்ரீட்டில் இருந்து துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் நுழைவாயிலில் இருந்து செல்லும் தெருக்களையும் பாதிக்கிறது.  பிக்கப் டிரக்குகள், வேன்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் போன்ற இலகுரக வாகனங்களுக்கு மட்டும் மாற்றுப்பாதையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

சவூதி அரேபியா மற்றும் ஓமன் எல்லையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள இரயில் நெட்வொர்க்கான எதிஹாட் ரயில் அமைப்பதற்கு இந்த மாற்றுப்பாதை அவசியம். அதற்கேற்ப உங்கள் பயணங்களைத் திட்டமிட்டு முன்கூட்டி புறப்படுங்கள். தெளிவாகக் குறிக்கப்பட்ட மாற்றுப்பாதையில் கவனம் செலுத்த வேண்டும்.

ஷார்ஜா

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அல் மினா ஸ்ட்ரீட்டை டிசம்பர் 11 திங்கள் முதல் டிசம்பர் 30, 2023 சனிக்கிழமை வரை ஒரு பகுதியளவு மூடுவதாக அறிவித்துள்ளது. அல் லய்யா பகுதியில் நடைபெறும் வாட்டர் கனல் (water canal) அபிவிருத்தித் திட்டங்களுக்கு இடமளிக்க இந்த தற்காலிக மூடல் அவசியம்.

புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டும் அல் லய்யா நீர் கால்வாய் மேம்பாட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மூடல் உள்ளது. வாகன ஓட்டிகள் அதற்கேற்ப பயணங்களை திட்டமிட்டு இந்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!