வளைகுடா செய்திகள்

ஓமனில் இருந்து இந்தியாவுக்கு செல்லவிருந்த பயணிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்.. தடுப்பூசி செலுத்தாத பயணிகளே உஷார்..!

ஓமனில் இருந்து இந்தியாவுக்குப் செல்ல விரும்பிய பயணிகள் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தாதாலும், பயணித்திற்கு முந்திய கோவிட் பரிசோதனை சான்றிதழ் இல்லாததாலும் விமான நிலையத்திl இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக Go First விமான நிறுவனத்தின் விற்பனை மேலாளர் வெங்கட் பெருமாள் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி முழுமையாக போடவில்லை என்றால், தங்கள் விமானங்களில் ஏறும் முன் கோவிட் பரிசோதனை சான்றிதழ் அவசியம் என்று வெங்கட் பெருமாள் கூறினார். பயணிகள் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் அல்லது விமானத்தில் ஏறும் போது எதிர்மறையான PCR பரிசோதனையை வழங்க வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கத் தவறிய பயணிகள் விமான நிலைய செக்-இன் போது திருப்பி அனுப்பபடுவார்கள் என்று Go First விமான நிறுவனத்தின் விற்பனை மேலாளர் வெங்கட் பெருமாள் கூறியுள்ளார்.

“எங்களது விமானங்களுக்கு முன்பதிவு செய்யும் பயணிகள் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பல நிகழ்வுகளை நாங்கள் கண்டுள்ளோம். பயணிகளிடையே கோவிட் நெறிமுறைகளை உறுதி செய்வதில் இந்திய அரசு மிகவும் கண்டிப்புடன் உள்ளது என்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

இந்தியா செல்லும் பயணிகளுக்கு முந்தைய பதிவுப் படிவமான ஏர் சுவிதா, பயணிகளின் நிரந்தர முகவரி, வருகை, புறப்பாடு மற்றும் தொடர்புத் தகவல் உள்ளிட்ட பிற விவரங்களுடன் பதிவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!