வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியா: கொதிக்கும் வெயிலில் பாலைவனத்தில் சிக்கிய கார்.. தாகத்தால் பரிதாபமாய் இறந்து போன 7 வயது சிறுவன் மற்றும் தந்தை..!!

சவுதி அரேபியாவில் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு நபரும் அவரது 7 வயது மகனும் பாலைவனத்தின் நடுவே காரில் மாட்டிக்கொண்டு தாகம், சோர்வு காரணமாக உயிரிழந்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் அஜ்மான் பள்ளத்தாக்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்க தனது மகனை அழைத்துச் சென்ற வேலையில் இருவரும் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை, பிக்-அப் டிரக் வண்டியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது வண்டி மணலில் சிக்கியது, வெளியே எடுக்க பல முயற்சிகள் செய்தும் தோல்வியடைந்த நிலையில், அதிக வெப்பத்தின் விளைவாக சோர்வடைந்து கைவிட்டார். உதவி கேட்க மொபைல் போனில் சிக்னல் கிடைக்காததால், கால் நடையாகவே பயணத்தைத் தொடர முடிவு செய்தார். அப்போது சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மகன் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தனியாக பயணத்தைத் தொடர முயன்றதாகவும், ஆனால் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே தாகம் மற்றும் சோர்வு காரணமாக அவரும் உயரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் காணாமல் போய்விட்டதாக அவர்களது குடும்பத்தினர்கள் தெரிவித்ததை அடுத்து, சவுதி அரேபிய மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு பிரின்ஸ் சுல்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!