வளைகுடா செய்திகள்

கொரோனாவிற்கான அனைத்து கட்டுபாடுகளையும் நீக்குவதாக அறிவித்த சவூதி அரேபியா.. முகக்கவசம் இனி கட்டாயமில்லை..!!

சவூதி அரேபியாவில் கோவிட் -19 தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைள் தளர்த்தப்படுவதால், இனி அந்நாட்டில் வசிக்கக்கூடிய மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசி மற்றும் கோவிட்-19 நிலைக்கான சான்றுகள் இனி பொது இடங்களுக்குள் நுழையவோ அல்லது போக்குவரத்தில் பயணிக்கவோ தேவையில்லை என்றும் வரையறுக்கப்பட்ட விலக்குகளுடன் தேவைப்படும் துறைகளுக்கு கொரோனா சான்றுகள் இருந்தால் போதும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சவூதியை விட்டு வெளியேற விரும்புவோருக்கு, கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஆகியவற்றுக்கு இடையே கால அவகாசம் மூன்றிலிருந்து எட்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியிலும், மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியிலும் முகக்கவசங்ள் அணிவது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும், ஹஜ் மாதம் வரவிருப்பதால் இவை இரண்டும் மசூதிகளும் பல்லாயிரக்கணக்கானோரால் நிரம்பி வழிய உள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தாத மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!