வளைகுடா செய்திகள்

சவூதியில் இனி லக்கேஜ் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு..!

சவூதி அரேபியாவில் பயணிகளின் சாமான்களை தாமதப்படுத்தினாலோ, தொலைத்தாலோ அல்லது சேதப்படுத்தினாலோ விமான சேவை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு ஊடக செய்தி வெளியிட்டுள்ளன.

சிவில் ஏவியேஷன் பொது ஆணையமான (GACA) விமானச் சேவை நிறுவனம், டிக்கெட் வைத்திருக்கும் ஒவ்வொரு பயணிகளுக்கும் குறைந்தபட்சம் 1,820 சவூதி ரியால்கள் லக்கேஜ் இழப்பிற்கு வழங்க வேண்டும் என்றும் சேதம் அல்லது தாமதம் ஆகியவற்றிற்கு 6,000 ரியாலுக்கு மேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பயணிகளின் லக்கேஜில் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தால் விமானத்தில் ஏறும் முன், இழப்பீட்டுத் தொகையை உயர்த்த அவற்றின் இருப்பு மற்றும் அதன் மதிப்பை விமான கேரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று GACA மேலும் தெரிவித்துள்ளது.

பயணிகளின் லக்கேஜ் தாமதமானால், ஒவ்வொரு நாளும் தாமதத்திற்கு 104 ரியால்களுக்கு சமமான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் உள்நாட்டு விமானங்களுக்கு அதிகபட்சமாக 520 ரியால்களுக்கு வழங்க வேண்டும்.

சர்வதேச விமானங்களைப் பொறுத்தவரை, லக்கேஜ் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 208 ரியாலுக்கு சமமான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் தாமதமான லக்கேஜ்களை பெறும்போது அதிகபட்சமாக 1,040 ரியால்கள் வழங்க வேண்டும்.

இழப்பீட்டுக் கோரிக்கையைப் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பயணிகளின் லக்கேஜில் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் விமான கேரியர் ஈடுசெய்ய வேண்டும் என்று GACA தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!