அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

தமிழகத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அமீரக வீரரை வீழ்த்தி இந்திய வீரர் வெற்றி..!

இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்ற தமிழகம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து போட்டியைநடத்தி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகள்அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ்ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் மாலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய வீரர்வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீரருக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்திய ஓபன் பி பிரிவில் விளையாடிய ரவுனக்சத்வாணி ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரஹ்மானை எதிர்த்து விளையாடினார். சத்வாணி வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி36வது நகர்த்தலில் அமீரகத்தைச் சேர்ந்த வீரரை வீழ்த்தி வெற்றி பெறுள்ளார்.

16 வயதே நிரம்பிய ரவுனக் சத்வாணி உலக தரவரிசை பட்டியலில் 185 ஆவது இடத்தில் உள்ளார். இந்த வெற்றியை அடுத்துதொடர்ந்து அவர் எந்த நாட்டு வீரருடன் விளையாட வேண்டும் என்ற பட்டியல் விரைவில் தெரிக்கப்பட உள்ளது. போட்டிமுடிவடைந்தவுடன் வெற்றி குறித்து ரவுனக் சத்வாணி கூறுகையில், “இது எனக்கு முதல் ஒலிம்பியாட் போட்டி ஆகும். இந்தியஅணிக்காக விளையாடி வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுஎன்றார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!