அமீரக செய்திகள்

ஆசிய கோப்பை: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணி மோதல்.. இந்த சாலையை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுரை..!!

அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் இன்று (செப்டம்பர் 8, வியாழன்) இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே  போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியைக் காண அதிகளவில் பார்வையாளர்கள் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் ஷேக் முகமது பின் சையத் சாலைக்கு அருகிலுள்ள ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் தாமதம் ஏற்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு RTA அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நிகழ்வுகளின் காரணமாக, செப்டம்பர் 8, வியாழன், மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை, ஷேக் முகமது பின் சையத் சாலை இன்டர்செக்‌ஷனுக்கு அருகில் உள்ள ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் தாமதம் ஏற்படும்” என்று RTA ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

அத்துடன் “பொதுமக்கள் தங்கள் இலக்கு/போட்டியிடத்தை அடைய Umm Suqeim ஸ்ட்ரீட்டைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், அதே நேரத்தில் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் வசிப்பவர்கள் அல் ஃபே சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தலாம். தயவுசெய்து உங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்” என்று RTA மேலும் கூறியுள்ளது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!