அமீரக செய்திகள்

துபாயில் மூன்று நாட்கள் நடைபெறும் சூப்பர் சேல்..!! பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!!

துபாயில் உள்ள சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் வரும் நவம்பர் 25 வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வரை தாங்கள் ஷாப்பிங் செய்யும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் ஃபெஸ்டிவல் அண்ட் ரீடெயில் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த 3 நாள் சூப்பர் விற்பனையின் மூலம் நகரின் ஷாப்பிங் மால்களில் சிறந்த சலுகைகளை பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷாப்பிங் செய்பவர்கள் தங்களுக்குப் பிடித்த அனைத்து பிராண்டுகளிலும் 90 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெற இந்த சூப்பர் சேல் ஒரு வாய்ப்பாகும். விற்பனை நடைபெறும் மூன்று நாட்கள் முழுவதும் வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் பலவற்றில் தள்ளுபடிகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருக்கக்கூடிய மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மிர்திஃப், துபாய் மால், துபாய் மெரினா மால், துபாய் ஹில்ஸ் மால், மெர்கடோ, டவுன் சென்டர் ஜுமைரா, இபின் பதூதா, சர்க்கிள் மால், தி பாயின்ட், நக்கீல் மால், DIFC கேட் அவென்யூ, ஃபெஸ்டிவல் பிளாசா, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், தி அவுட்லெட் வில்லேஜ், அல் சீஃப், புளூவாட்டர்ஸ், தி பீச், சிட்டி வாக் மற்றும் லா மெர் உள்ளிட்ட நகரமெங்கும் உள்ள ஷாப்பிங் மையங்களில் இந்த 3 நாள் சூப்பர் சேல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 25 முதல் 27 வரை துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் ஸ்டோர்களில் 1,000 திர்ஹம் ஷாப்பிங் செய்பவர்கள், 30,000 திர்ஹம் மதிப்புள்ள கிஃப்ட் கார்டு வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரமோஷன் வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!