வளைகுடா செய்திகள்

ட்ரோன் ஷோ, லேசர் ஷோ, கைட் ஷோ என களைகட்டவுள்ள ஓமான் தேசிய தின கொண்டாட்டங்கள்..!! எப்போது துவங்கும்..??

ஓமானில் வரவிருக்கும் 52வது தேசிய தினத்தையொட்டி, ஓமானில் இருக்கக்கூடிய பல்வேறு கவர்னரேட்டுகளில் ட்ரோன் ஷோ, லேசர் மற்றும் கைட் ஷோ ஆகியவை நவம்பர் 18, 2022 வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய கொண்டாட்டங்களுக்கான தலைமைச் செயலகம், பின்வரும் இடங்கள் மற்றும் தேதிகளில், ஓமானின் 52வது தேசிய தினமான 2022 இன் கொண்டாட்டங்களை இரவு 8 மணிக்கு நடத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளது. கொண்டாட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு:

>> நவம்பர் 18, 2022 வெள்ளிக்கிழமை அன்று தோஃபர் கவர்னரேட்டில் உள்ள சாஹல் அதீன் (Sahal Ateen) மற்றும் மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள அமரத் பொதுப் பூங்காவில் (Amerat Public Park) ட்ரோன்கள் மற்றும் லேசர் ஷோக்கள் நடைபெறும்.

>> நவம்பர் 19, 2022 சனிக்கிழமையன்று, மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள அல் கௌத் டேமில் (Al Khoud Dam) ட்ரோன்கள் மற்றும் லேசர் ஷோக்கள் நடைபெறும்.

>> முசந்தம் கவர்னரேட்டில் வசிப்பவர்கள் நவம்பர் 21, 2022 திங்கட்கிழமை கசாப்பில் (Khasab (Dabdaba)) ட்ரோன் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

மேலும் நவம்பர் 18 ஆம் தேதி சாஹல் அதீன், நவம்பர் 22 ஆம் தேதி அல்-அதைபா (Al-Athaiba) கடற்கரை மற்றும் நவம்பர் 23 ஆம் தேதி சீப் (seeb) கடற்கரையில் மாலை 4 மணிக்கு கைட் ஷோக்கள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!