அமீரக செய்திகள்

UAE: தேசிய தின விடுமுறையை பிரம்மாண்டமாக கொண்டாடவிருக்கும் குளோபல் வில்லேஜ்..!!

அமீரகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகமெங்கும் இந்த கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் துபாயின் குளோபல் வில்லேஜிலும் தேசிய தினத்தை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி குளோபல் வில்லேஜில் நடத்தப்படும் பிரமாண்டமான வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் சேர்த்து, தேசிய தின விடுமுறை நாட்களில் தொடர்ச்சியான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1 முதல் 4 வரை, பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கண்கவர் இசை நிகழ்ச்சிகளையும் அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய தின விடுமுறை தினங்களில் குளோபல் வில்லேஜ் அமீரக தேசிய கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்படும் என்றும் 27 பெவிலியன்களில் இருந்து பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு, வானவேடிக்கை நிகழ்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் வில்லேஜின் மூத்த மேலாளர் முஹன்னத் இஷாக் கூறியதாவது: “குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் வருவதற்கு ஒரு சிறந்த இடமாக இது உள்ளது. குளோபல் வில்லேஜ் என்பது அமீரகத்தின் தனித்துவமான உலகளாவிய அடையாளத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக, உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு கலாச்சார பின்னணியில் உள்ள மக்கள் ஒன்று கூடும் இடமாகும். இந்த நாட்டில் வாழ்ந்து அதன் பாரம்பரியங்களை முன்னிலைப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இசைக் நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைக் காட்சிகள் என தேசிய தின கொண்டாட்டத்தின் போது சிறந்த அனுபவங்களை பார்வையாளர்களுக்கு வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!