அமீரக செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ள ஷார்ஜா..!!

ஷார்ஜா முனிசிபாலிட்டியானது டிசம்பர் 1, வியாழன் முதல் டிசம்பர் 3 சனிக்கிழமை வரை ஷார்ஜா எமிரேட்டின் பெரும்பாலான பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது 51வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீல அடையாளங்களுடன் (Blue information sign) குறிக்கப்பட்ட 7-நாள் கட்டண பார்க்கிங் மண்டலங்களைத் (6 day paid parking zones) தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஷார்ஜாவில் மேற்கண்ட நாட்களுக்கு பொது பார்க்கிங் இலவசம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஷார்ஜா தேசிய தின கொண்டாட்டக் குழு தேசிய தினத்தை கொண்டாடுவதற்கான அதன் செயல்திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 24 முதல் ஷார்ஜாவின் நகரங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா மற்றும் கலாச்சார தலங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகள் டிசம்பர் 3 வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

Flag Island, Al Majaz Amphitheatre, Sharjah National Park, Maliha Public Park, Al Hisn Island and Al Kharous in Dibba Al Hisn, Khorfakkan Amphitheater, Wadi Al Helo and various areas of Kalba, parks and residential areas in Al Bataeh, various areas of Al Madam, Al Dhaid Fort, the Heritage Village in Al Hamriyah ஆகிய இடங்களில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!