அமீரக செய்திகள்

அமீரகத்தில் தேசிய தின வானவேடிக்கைகளை எங்கெல்லாம் காணலாம்..?? ஒரு சிறு பார்வை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தினம் இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் அதற்குண்டான ஏற்பாடுகளும் கொண்டாட்டங்களும் அமீரகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேசிய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை டிசம்பர் 1 வியாழன் முதல் டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அமீரகத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும்  முக்கிய இடங்கள் என்ன என்பதைக் கீழே காணலாம்.

துபாய்

ப்ளூவாட்டர்ஸ் ஐலேண்ட்

டிசம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ப்ளூவாட்டர்ஸ் பகுதியில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு எமிராட்டியர்களின் இசையுடன் உள்ளூர் கைவினைஞர்களும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

குளோபல் வில்லேஜ்

அமீரகவாசிகளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு இசையுடன் நடக்கும் வான வேடிக்கையானது தேசிய தினத்தன்று இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி வாக் (The Walk, JBR)

தேசிய தினத்தன்று துபாய் JBR இல் 1.7 கிமீ நீளத்திற்கு வாணவேடிக்கை மற்றும் சிறப்பு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் சீஃப்:

தேசத்தின் வளமான வரலாற்றின் கட்டிடக்கலை மற்றும் சுற்றுப்புறச்சூழலுடன், க்ரீக் பக்கத்தில் இருக்கும் இடமான அல் சீஃப்பில் லைவ் ஷோ மற்றும் பிரமிக்க வைக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் தேசிய தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

தி பாயிண்ட் (The Pointe, Palm Jumeirah)

பாம் ஜுமேரா தேசிய தினத்தில் தி பாய்ண்டேயில் பிரமிக்க வைக்கும் ஃபவுண்டைன் காட்சிகளையும் வாணவேடிக்கைகளையும் நிகழ்த்தவுள்ளது. இதனைக் காண விரும்பும் குடியிருப்பாளர்கள் டிசம்பர் 2 ஆம் தேதி இரவு 9 மணிக்கு கண்கவர் பாம் ஃபவுண்டைன் நிகழ்ச்சியை இலவசமாகப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி

பவாபத் அல் ஷர்க் மால் (Bawabath Al Sharq Mall)

இந்த மாலில் இதுவரை இல்லாத அளவில் டிசம்பர் 2 அன்று இரவு 9 மணிக்கு மிகப்பெரிய வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் பேலஸ்:

அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் தேசிய தினத்தன்று சிறப்பு வானவேடிக்கைகளை நிகழ்த்தும் மிக முக்கிய இடமான எமிரேட்ஸ் பேலஸில் இந்த வருடமும் பிரம்மாண்ட வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாஸ் ஐலேண்ட்

யாஸ் ஐலேண்டில் இருக்கும் யாஸ் பே வாட்டர்ஃபிரண்டில் தேசிய தினத்தன்று ஒரு அற்புதமான வானவேடிக்கை காட்சி நடத்தப்படும் என்றும் இந்த நிகழ்ச்சி டிசம்பர் 2ம் தேதி இரவு 9 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் மரியா ஐலேண்ட்


டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் அல் மரியா ஐலேண்டில் உள்ள தி ப்ரோமனேடில் (The Promenade) பிரமிக்க வைக்கும் வானவேடிக்கைகளைக் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் அனுபவங்களுக்காக வானவேடிக்கை நிகழ்த்தப்படும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வாகன நிறுத்துமிடம் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களுடன் அபுதாபி கார்னிச் பகுதியிலும் ஒவ்வொரு வருடமும் தேசிய தின கொண்டாட்டத்திற்காக பிரத்யேக வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!