அமீரக செய்திகள்

பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள SeaWorld Abudhabi..!! புதுவித அனுபவங்களை பெறுவதற்கான டிக்கெட் எவ்வளவு..??

பெரும்பாலான குடியிருப்பாளர்களின் ஆவலையும் காத்திருப்பையும் வெகுநாட்களாக அதிகரிக்கச் செய்த SeaWorld அபுதாபி, இறுதியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) பொது மக்களுக்கு அதன் மிகப்பெரிய கதவுகளை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க்கின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் எமிராட்டி சூப்பர் ஸ்டார் ஹுசைன் அல் ஜாஸ்மி மற்றும் ஸ்காட்டிஷ் ரெக்கார்டிங் கலைஞர் ரெட் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கூடவே, 120 இசைக்கலைஞர்களின் விறுவிறுப்பான ஆர்கெஸ்ட்ராவும் இடம்பெற்றது.

Yas Island இன் தீம் பூங்காக்களின் தொகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சீவேர்ல்ட் அபுதாபியின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, அதன் பொது மேலாளர் தாமஸ் ஜேம்ஸ் கஃபர்லே என்பவர் ஊடகங்களிடம் பேசுகையில், தீம் பார்க்கில் உள்ள சாகச அனுபவங்கள் மற்றும் அதிரடி ரைடுகள் குறித்தும், டிக்கெட் கட்டணம் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

எட்டு மண்டலங்கள்:

அவரது கூற்றுப்படி, இங்கு விருந்தினர்கள் காண்பதற்கு தனித்துவமான தீம்கள் கொண்ட எட்டு பகுதிகள் உள்ளன. சுமார் 183,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்கா அபுதாபி ஓஷனில் தொடங்கி ஒன்ஸ் ஓஷன் வரை 100,000 க்கும் மேற்பட்ட கடல் விலங்குகளைக் கொண்ட எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பார்வையாளர்களை பின்வரும் பூங்காவின் மையம் மற்றும் ஸ்போக் மாடல்கள் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும்: மைக்ரோ ஓஷன், எண்ட்லெஸ் ஓஷன், டிராபிகல் ஓஷன், ராக்கி பாயிண்ட், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவுடன் கூடிய போலார் ஓஷன்

அதுமட்டுமின்றி, பூங்கா முழுவதும் ஒட்டுமொத்தமாக, 15 க்கும் மேற்பட்ட சவாரிகள், 100 விலங்கு கண்காட்சிகள், 10 க்கும் மேற்பட்ட நெருங்கிய விலங்கு சந்திப்புகள், 20 நேரடி கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்று ஏராளமான அனுபவங்கள் உள்ளன. மேலும், தண்ணீருக்கு மேலேயும் கீழேயும் 18 உணவு அனுபவங்கள் மற்றும் 13 ஷாப்பிங் அனுபவங்கள் உள்ளன.

மேலும், இங்கு வளைகுடாவை பூர்வீகமாகக் கொண்ட மீன்கள், கடல் ஆமைகள், துகோங் மற்றும் கடல் பாம்புகள் இருப்பதாகவும், பார்வையாளர்கள் வந்து அவற்றைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கஃபர்லே கூறியுள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய அக்வாரியம்:

உலகில் மிகப்பெரிய அக்வாரியத்தில் விரிவான கலப்பின மீன் வகைகளின் வாழ்விடத்தை இது பெற்றுள்ளதாகக் கஃபர்லே குறிப்பிட்டுள்ளார்.

சீவேர்ல்ட் அபுதாபி சுமார் 25 மில்லியன் லிட்டர் தண்ணீரில் 68,000 க்கும் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான பல-இனங்கள் கடல்வாழ் மீன்வளத்தை  கொண்டுள்ளது. இது சுறாக்கள், பல்வேறு மீன்களின் பெரிய மற்றும் சிறிய பள்ளிகள், மாண்டிஸ் இறால், ஆக்டோபஸ், கட்ஃபிஷ், ரீஃப் ஸ்க்விட்கள், நண்டுகள், ஈல்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு கடல் விலங்குகளின் தாயகமாகும் என்பதால் பார்வையாளர்களுக்கு இடைவிடாத காட்சி அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி. மேலும், வட்ட கண்காணிப்பு தளத்தில் (circular observation deck) நேரத்தைச் செலவழித்த பிறகு, சுழல், அக்ரிலிக் சுரங்கப்பாதை வழியாக ஓசன் நடை (Ocean Walk), உள்ளிட்ட பல புது அனுபவங்களை காணலாம்.

டால்பின்களும் கடல் சிங்கங்களும்:

சுமார் 2,000 திறன் கொண்ட டிராபிகல் ஆம்பிதியேட்டரில் கண்கவர் டால்பின் காட்சியை ட்ராபிகல் ஓசன் வழங்கும். மேலும், அங்குள்ள பிளமிங்கோ பாயிண்ட்டில் வெப்பமண்டல பறவைகளும் 24 டால்பின்களும் உள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.

அங்கு முன்புறத்தில் இருக்கும் குளமானது டால்பின் விளக்கக்காட்சிக்காக உள்ளது, இது 11 மீட்டர் ஆழம் கொண்டது. இவை மட்டுமின்றி, 300 வகையான பறவைகளைக் கொண்ட ஒரு பறவை பறவைக் கூடம் மற்றும் ராக்கி பாயிண்டில், இரண்டு கலிபோர்னியா கடல் சிங்கங்களுடன் ஒரு ஷோ உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்கு பராமரிப்பு நிலையம்:

பூங்காவின் ஒரு ஒசனில் உள்ள விலங்கு பராமரிப்பு மையத்தை பூங்காவின் முக்கிய பகுதி என்று காஃபெர்லே கருதியுள்ளார். விலங்கு பராமரிப்பு நிபுணர்கள் வழக்கமான சுகாதார சோதனைகளை மேற்கொள்வதையும், தேவைப்படும்போது மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதையும் பார்வையாளர்கள் பார்க்கலாம்.

அட்ரினலின் ரஷ்ஷிங் ரைடு:

டிராபிகள் ஒஷனில் அமைந்துள்ள மந்தா கோஸ்டர் பார்க்கில் மிகவும் புதுவிதமான த்ரில்லர் அனுபவங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், இந்த ரைடு உலகின் முதல் ஜீரோ-கிராவிட்டி ஃபிளிப்-அவுட், உலகின் முதல் ட்விஸ்டிங் டபுள்-டவுன் டைவ் மற்றும் 17 ஏர்டைம் தருணங்களைக் கொண்டுள்ளது.

ஒன் எபிக் ஓசன் ஸ்டோரி (One Epic Ocean story):

பூங்காவில் நுழைந்ததும் பூமியில் உள்ள வாழ்க்கைக்கும் கடலுக்கும் இடையிலான தொடர்பைக் கொண்டாடும் அதே வேளையில், பூமியின் மிகவும் கவர்ச்சிகரமான கடல் சூழல்களின் வழியாக விருந்தினர்களை அழைத்துச் செல்லும் ஒரு பகுதியான இங்கு 360 டிகிரி வடிவமைப்பில் 218 மீ மற்றும் 15 மீட்டர் உயரம் கொண்ட திரைகளில் ஆடியோ மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுடன் காட்டப்படும்.

காஃபர்லே கூற்றுப்படி, பூங்காவின் கார் பார்க்கிங் முதல் முழு கூரைப் பகுதியிலும் சோலார் பேனல்கள் பொருத்துவதன் மூலம் சூரிய ஒளி பெறப்படுகிறது. மேலும், வாழ்விடங்களில் பயன்படுத்தப்படும் நீரானது அபுதாபி வாட்டர்ஸ்-இல் இருந்து கொண்டு வந்து, அதை பூங்காவில் பயன்படுத்துவதற்கு முன்பு முறையாக பாடம் செய்யப்பட்டு பின்னர் விலங்குகளுக்கான வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்கிடையில், பூங்கா முழுவதும் சுமார் 1,000 ஊழியர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் 24 மணிநேர கடின உழைப்பின் மூலம் பூங்காவின் செயல்பாடு முழுமையானதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எப்படி டிக்கெட்டைப் பெறுவது?

சீவேர்ல்ட் அபுதாபி இணையதளத்தின் படி, ஆன்லைனில் பெரியவர்களுக்கு 375 திர்ஹம் மற்றும் குழந்தைகளுக்கு 290 திர்ஹம் டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்படும் அதே நேரத்தில், மூன்று வயதுக்குட்பட்டவர்கள் இலவசமாக நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாஸ் ஐலேண்டின் தீம் பார்க்குகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை அனுபவிக்க விரும்பினால், ஆன்லைனிலும் நுழைவாயிலிலும் மல்டி பார்க் அணுகலுக்கான டிக்கெட்டுகளை வாங்கலாம்.

அதன்படி, நீங்கள் 475 திர்ஹம்களுடன் 2-பார்க் அணுகலையும், 575 திர்ஹம்களுடன் 3-பார்க் அணுகலையும் மற்றும் 675 திர்ஹம்களுடன் 4-பார்க் அணுகலையும் பெற முடியும். குறிப்பாக, அனைத்து மல்டி-பார்க் பாஸ்களும் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் யாஸ் வருடாந்திர பாஸ் சலுகைகள் உள்ளன. https://www.seworldabudhabi.com/ என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம் மற்றும் யாஸ் வருடாந்திர பாஸுக்கு https://www.yasisland.com/en/yas-annual-pass என்ற லிங்க்கை கிளிக் செய்து நுழையலாம்.

பூங்கா செயல்படும் நேரம்:

தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நீட்டிக்கப்பட்ட நேரங்களுடன் பூங்கா செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!