அமீரக செய்திகள்

துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1 பார்க்கிங் முறையில் மாற்றம்.. ஜூன் 8 முதல் அமல்.. DXB ட்வீட்..!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 இல் உள்ள பயணிகள் வருகைகள் முன்தளத்திற்கு (Arrival Forecourt), இன்று ஜூன் 8, 2023 முதல் பேருந்து மற்றும் டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்து மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அணுக முடியும் என்று துபாய் விமான நிலையம் அறிவித்துள்ளது.

இது குறித்து துபாய் விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வருகைகள் தலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள், டெர்மினல் 1 இல் உள்ள இரண்டு கார் பார்க்கிங் வசதிகள் அல்லது வாலட் சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில், கார் பார்க் A – பிரீமியம் மற்றும் கார் பார்க் B – எகானமி என இரண்டு கார் பார்க்கிங் வசதிகள் உள்ளன. அவற்றின் கட்டண விபரங்கள் பின்வருமாறு:

கார் பார்க் A (டெர்மினல் 1 ல் இருந்து 2-3 நிமிட நடை தூரம்):

 • 5 நிமிடங்கள் – Dh5
 • 15 நிமிடங்கள் – Dh15
 • 30 நிமிடங்கள் – Dh30
 • 2 மணிநேரம் – Dh40
 • 3 மணி நேரம் – Dh55
 • 4 மணிநேரம் – Dh65
 • ஒரு நாள் முழுவதும் – Dh125
 • ஒவ்வொரு கூடுதல் நாளும் – Dh100

கார் பார்க் B (டெர்மினல் 1 ல் இருந்து 7-8 நிமிட நடை தூரம்):

 • 1 மணிநேரம் – Dh25
 • 2 மணிநேரம் – Dh30
 • 3 மணி நேரம் – Dh35
 • 4 மணிநேரம் – Dh45
 • ஒரு நாள் முழுவதும் – Dh85
 • ஒவ்வொரு கூடுதல் நாளும் – Dh75

Related Articles

Back to top button
error: Content is protected !!