அமீரக செய்திகள்

துபாய்: அங்கீகரிக்கப்படாத போக்குவரத்து முறைகளை பயன்படுத்தும் குடியிருப்பாளர்கள்.. எச்சரிக்கை விடுத்த RTA…!!

துபாயில் பொது போக்குவரத்து வசதிகளை பயண்படுத்தும் பயணிகள் அங்கீகரிக்கப்படாத, தனிப்பட்ட நபர்களால் இயக்கப்படும் பிற போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

துபாயில் பொது போக்குவரத்திற்கு எதிராக தனிப்பட்ட முறையில் சிலர் தங்களின் அனுமதிக்கப்படாத வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்று விடுவது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறையினரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அபராதங்களையும் விதித்து வருகின்றனர்.

எனவே, துபாயில் பயணிகள் RTA போக்குவரத்து மூலம் பயணிக்கும் போது அதில் இருக்கும் நன்மைகளையும், அதற்கு எதிராக சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத போக்குவரத்து முறைகளில் பயணிப்பதில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஆபத்துகளையும் பட்டியலிடும் வீடியோ ஒன்றினை ஆன்லைனில் பகிர்ந்துள்ளது.

RTA போக்குவரத்தில் உள்ள நன்மைகள்:

  • பணத்திற்கு மாற்றாக நோல் கார்டைப் பயன்படுத்தலாம்.
  • பயணத்தின்போது தொலைத்த பொருளை சரியான வழிகளில் சென்று எளிதாக மீட்டெடுக்கலாம்.
  • நன்கு பயிற்சி பெற்ற தொழில்முறை ஓட்டுநர்களுடன் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.
  • பயணத்தில் திருப்தி அடையவில்லை என்றால் ஆணையத்திற்கு புகாரளிக்கலாம்.

அங்கீகரிக்கப்படாத போக்குவரத்தில் உள்ள குறைபாடுகள்:

  • எல்லா நேரங்களிலும் கையில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • பயணத்தின் போது தொலைத்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.
  • வாகன ஓட்டுநர் தொழில்முறை சார்ந்த ஓட்டுநராக இல்லாமல் இருக்கலாம்.
  • பயணத்தில் குறைகள் இருந்தால் அந்த புகார்களை பதிவு செய்ய முடியாது.

ஆகவே, RTAஇன் வழிகாட்டுதலின் படி, ஆணையத்தின் பொது போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குடியிருப்பாளர்களை அறிவுறுத்துயுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!