அமீரக செய்திகள்

UAE: அல் அய்னில் இன்று முதல் 18 நாட்களுக்கு சாலை மூடலை அறிவித்த ITC..!! மாற்று வழியை பயன்படுத்த வேண்டுகோள்..!!

அபுதாபியில் இருக்கக்கூடிய அல் அய்ன் சாலையின் ஒரு பகுதி இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், வாகன ஓட்டிகளுக்கு சாலை மூடலை அறிவித்து, அவர்கள் செல்லக்கூடிய மாற்று வழிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

இதனையொட்டி முகமது பின் கலீஃபா ஸ்ட்ரீட் மூடப்படும் என்றும், போக்குவரத்து எதிர் திசையில் திருப்பி விடப்படும் என்றும் ITC தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த மூடலானது இன்று (ஜூன் 8, 2023 வியாழன்) முதல் ஜூன் 26, 2023 திங்கட்கிழமை வரை அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறும், சாலையில் விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!