அமீரக செய்திகள்

அமீரகத்தில் வேலை என கூறி மோசடி செய்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது..?? மோசடியில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள சில வழிகள் இங்கே…

வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை அதிகளவு வெளிநாட்டவர்கள் வேலை தேடி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் வேலைச் சந்தையில் போட்டித் தன்மை அதிகரிப்பதுடன் ஏமாற்றுபவர்கள் மற்றும் மோசடி செய்பவர்களும் வேலை தேடுபவர்களை குறிவைத்து நடத்தும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றது.

எனவே, வேலை தேடுபவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்து வருகின்றனர்.  அமீரகத்தில் வேலை தேடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகளும், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களும் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

1. அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி இல்லாமல் இருத்தல்:

உங்களை பணியமர்த்துபவர் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமில்லாத மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தும்போது மோசடி நடப்பதற்கு சாத்தியமாகும். பொதுவாக, முறையான ஆட்சேர்ப்பு செய்பவர்கள் எப்போதும் நிறுவனத்தின் பெயரைக் கொண்ட அவர்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி ஆட்சேர்ப்பு செய்வார்கள்.

ஆனால், மோசடி செய்பவர்கள் வேலை தேடுபவர்களை தொடர்பு கொள்ள Gmail அல்லது Yahoo போன்ற இலவச மின்னஞ்சல் ஐடி டொமைன்களைப் பயன்படுத்தலாம்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

2. சீரற்ற அழைப்பு:

நீங்கள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்காமலேயே அல்லது நேர்காணலுக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லாமலேயே உங்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக அழைப்பு வந்திருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அவர்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் மூலம் உங்களின் குறிப்பைப் பெற்றிருந்தாலோ, ஒரு முறையான தேர்வாளர் உங்களை நேர்காணலுக்குத் தொடர்புகொள்வார் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

3. வழக்கத்திற்கு மாறாக அதிக சம்பளம்:

உங்கள் வேலை வாய்ப்பு தொடர்பான இடுகையில் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் சம்பளம் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மோசடி செய்பவர் அதிகளவு சம்பளம் தருவதாக உறுதியளித்து மக்களை கவர்ந்திழுக்க முயற்சி செய்வார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

4. இலக்கணப் பிழைகள்

மற்ற ஆன்லைன் மோசடிகளைப் போலவே, எழுத்துப் பிழைகள் மற்றும் பிற இலக்கணப் பிழைகளை மோசடி செய்யும் நபர்கள் புரிவதை நீங்கள் கவனிக்கலாம். ஏனெனில் மோசடி செய்பவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச மாட்டார்கள் அல்லது அவர்கள் உருவாக்கும் பதிவுகளை சரிபார்க்காமல் பிழைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம். எனவே இது குறித்தும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

5. பணம் கேட்பது

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் விண்ணப்பதாரர்களிடம் கட்டணம் என்ற பேரில் பணம் கேட்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமான விசா வழங்குதல் போன்ற பிற நோக்கங்களுக்காகவும் அவர்கள் பணம் கேட்கலாம். ஒரு முறையான ஆட்சேர்ப்பு செய்பவர் ஆட்சேர்ப்பின் போது எந்த நிலையிலும் பணம் கேட்கமாட்டார் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!