அமீரக செய்திகள்

துபாயில் புதிதாக வீக்என்ட்-ஒன்லி பஸ் சேவை அறிமுகம்!!! பயண நேரத்தை குறைக்க நடவடிக்கை….

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பயணிகளின் தினசரி போக்குவரத்து அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய வார இறுதி பேருந்து (weekend-only bus) சேவையை அறிவித்துள்ளது.

துபாயில் நாளை (பிப்ரவரி 9ஆம் தேதியன்று), பேருந்து பயனர்களின் வசதிக்காக, குறிப்பாக மெட்ரோவில் இருந்து அல் மம்சார் கடற்கரைக்குச் செல்வோரின் வசதிக்காக, W20 என்ற புதிய வார இறுதி பேருந்து வழித்தடம்  RTAஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதிய W20 சேவை, வெள்ளி முதல் ஞாயிறு வரை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். அத்துடன் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பேருந்து அல் மம்சார் கடற்கரையுடன் ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இது பல பொது பேருந்து வழித்தடங்களை மேம்படுத்தி, எமிரேட் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுமூகமான, வசதியான பயணங்களை உறுதி செய்யும் என்று RTA கூறியுள்ளது. முக்கியமாக, இந்த மேம்பாடுகள் பேருந்து பயணிகளின் நடமாட்டத்தை சீரமைக்கவும் பயண நேரத்தை குறைக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேருந்து வழித்தட மேம்பாடுகள்:

துபாயில் பேருந்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ரூட் 11B ஐ பாதை 11 என மறுபெயரிடுவதும் அடங்கும். அதேபோல், 16A மற்றும் 16B வழித்தடங்கள் முறையே 16 மற்றும் 25 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ரூட் 16 அல் ரஷ்தியா பேருந்து நிலையத்தில் இருந்து அல் அவிர் நோக்கியும், ரூட் 25 கோல்ட் சூக் பேருந்து நிலையத்திலிருந்து அல் ரஷ்தியாவையும் நோக்கி பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே பயணிகளின் தினசரி பயண அனுபவத்தை மேம்படுத்த சில பேருந்து வழித்தடங்களில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது:

ரூட் F62  துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மற்றும் அல் கர்ஹூத் சுற்றுப்புறத்தை உள்ளடக்கிய பகுதிகளில் சேவை செய்யும். அதுபோலவே, வழித்தடங்கள் 103 மற்றும் 106 முக்கிய நிலையங்களில் இருந்து குளோபல் வில்லேஜ் வரை நேரடி, இடைவிடாத சேவைகளை வழங்கும்.

அத்துடன் ரூட் C04 முகமது பின் ரஷித் நூலகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூட் E303 அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் வழியாக ஷார்ஜாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதே தேதியில் இருந்து, வழித்தடங்கள் 16A, 16B, 64A நிறுத்தப்படும். கூடுதலாக, RTA இன் பொதுப் போக்குவரத்து நிறுவனம் பின்வரும் 13 பேருந்து வழித்தடங்களுக்கான பயண நேர மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்: 5, 7, 62, 81, 110, C04, C09, E306, E307A, F12, F15, F26 மற்றும் SH1.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!