அமீரக செய்திகள்

அபுதாபியில் இன்று முதல் 15 நாட்களுக்கு பகுதியளவு சாலை மூடப்படும்.. அறிவிப்பை வெளியிட்ட ITC..!!

அபுதாபியில் உள்ள முக்கிய சாலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 15 நாட்களுக்கு பகுதி சாலை மூடல் அமல்படுத்தப்படும் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 வரை அபுதாபி எமிரேட்டிற்கு உட்பட்ட அல் தாஃப்-அல் அய்ன் (E16) சாலையில் பகுதியளவு சாலை மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் மூடப்பட்ட பகுதியைக் காணலாம்:

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!