அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்றிரவும், நாளையும் மழை பெய்யும்.. மிதமான காற்று வீசும்.. வானிலை நிலவரத்தை வெளியிட்ட NCM..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய வானிலை ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும் என்று நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், இன்றிரவு (ஏப்ரல் 02) மற்றும் புதன்கிழமை காலை நாட்டின் மேற்கு திசையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் NCM அறிவித்துள்ளது.

NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, சில நேரங்களில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் லேசானது முதல் மிதமான காற்று வீசுவதை குடியிருப்பாளர்கள் உணரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மலைப்பகுதிகளில் வெப்பநிலை 12ºC வரை குறையும் என்றும், நாட்டின் உட்புற பகுதிகளில் 34ºC வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் தேசிய வானிலை மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் சற்று மிதமாக இருக்கும் என்றும், சில நேரங்களில் சற்று அதிகமாக இருக்கும் என்றும் அமீரகத்தின் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!