அமீரக செய்திகள்

தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை.. மே மாதத்திற்கான விலைப்பட்டியலை வெளியிட்ட அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2024ம் ஆண்டின் மே மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் விலை முன்னர் இருந்ததை விட சற்று உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மே மாதத்திலும் எரிபொருள் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் குழுவின் மே மாத விலைப்பட்டியலின் படி, மே 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.34 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஏப்ரல் மாதத்தில் 3.15 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.22 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஏப்ரல் மாதம் 3.03 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 3.15 திர்ஹம்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2.96 திர்ஹம்சாக ஏப்ரல் மாதத்தில் இருந்தது.

அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.09 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது மே மாத விலை பட்டியலில் 3.07 திர்ஹம்சாக சற்றே குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் நீங்கள் ஓட்டும் வாகனத்தின் வகையைப் பொறுத்து, முழு டேங்க்கை நிரப்புவதற்கு ஆகும் பெட்ரோல் செலவானது ஏப்ரல் மாதத்தை விட 9.69 முதல் 14.06 திர்ஹம்ஸ் வரை கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!