அமீரக செய்திகள்

அபுதாபியில் போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடி என பரவும் செய்தி..!! எச்சரிக்கை விடுத்த அபுதாபி போலீஸ்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கடந்த சில நாடலகளாக போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த செய்திகள் பொய்யானவை என்று அபுதாபி காவல்துறையினர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது அபுதாபி எமிரேட்டில் வாகன ஓட்டிகளுக்கு நடைமுறையில் உள்ள ஒரே அபராத தள்ளுபடி, நிலுவையில் உள்ள தங்களின் அபராதத் தொகையை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கான முன்முயற்சி மட்டுமே என்றும் அபுதாபி காவல்துறையினர் குடியிருப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதாவது, போக்குவரத்து விதிமீறலில் இருந்து 60 நாட்களுக்குள் பணம் செலுத்துபவர்கள் அபராதத்தில் 35 சதவீதம் தள்ளுபடி பெறலாம் மற்றும் 60 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள் பணம் செலுத்தினால், அபராதத்தில் 25 சதவீதம் குறைக்கப்படும் என அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க தகவல்களைப் பகிர்வதற்கு முன் அவற்றின் துல்லியத்தை உறுதிப்படுத்துமாறும், குழப்பங்களை தவிர்க்க அதிகாரப்பூர்வ ஊடக ஆதாரங்களை மட்டும் நம்புமாறும் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தவறான மற்றும் போலியான தகவல்களைப் பகிர்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மீறினால் 200,000 திர்ஹம் வரை அபராதமும் மற்றும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!