அமீரக செய்திகள்

அமீரகத்தில் இந்த 4 மையங்களில் ‘விசா மெடிக்கல் டெஸ்ட்’ சேவை நிறுத்தம்.. அறிவிப்பை வெளியிட்ட அதிகாரிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் கட்டாயம் மருத்துவ உடற்தகுதி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாக, விசா விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு விண்ணப்பதாரர் மருத்துவ ரீதியாக தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தும் இந்த அறிக்கை அவசியமாகும். அமீரகத்தில் உள்ள ஒவ்வொரு எமிரேட்டிலும் பல்வேறு இடங்களில் இதற்காக மருத்துவ சுகாதார மையங்கள் உள்ளன.

அவற்றில் அமீரகத்தில் உள்ள சில பொது சுகாதார மையங்கள் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் குடியிருப்பு விசா (residential visa) விண்ணப்பங்களுக்கான மருத்துவ உடற்தகுதி சோதனை (medical fitness tests) சேவைகளை நிறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (EHS) தரப்பிலும் இந்த சேவை நிறுத்தமானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விசா விண்ணப்பதாரர்கள் நாட்டில் உள்ள மற்ற மையங்களில் இந்த சேவையை அணுக முடியும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின் படி, பின்வரும் நான்கு சுகாதார மையங்களில் விசாக்களுக்கான மருத்துவ உடற்தகுதி சோதனைகள் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அவை:

 • அஜ்மான் பொது சுகாதார மையம்
 • ராஸ் அல் கைமா பொது சுகாதார மையம்
 • உம் அல் குவைன் பொது சுகாதார மையம்
 • ஃபுஜைரா பொது சுகாதார மையம்

மேற்கூறிய மையங்களைத் தவிர, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் ஃபுஜைராவில் உள்ள விசா விண்ணப்பதாரர்கள், அமீரகத்தில் உள்ள பிற EHS மையங்களில் சேவையைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற மையங்கள்:

அஜ்மான்

 • முஷைர்ஃப் ரெசிடென்ஸ் மருத்துவ பரிசோதனை மையம் (Mushairef Residence Medical Examination Centre)
 • அல் நுவைமியா ரெசிடென்ஸ் மருத்துவ பரிசோதனை மையம் (Al Nuaimiya Residence Medical Examination Centre)

ராஸ் அல் கைமா

 • தஹான் ரெசிடென்ஸ் மருத்துவ பரிசோதனை மையம் (Dahan Residence Medical Examination Centre)
 • RAKZ ரெசிடென்ஸ் மருத்துவ பரிசோதனை மையம் (RAKZ Residence Medical Examination Centre)

உம் அல் குவைன்

 • அல் மதார் ரெசிடென்ஸ் மருத்துவ பரிசோதனை மையம் (Al Madar Residence Medical Examination Centre)

ஃபுஜைரா

 • அல் அமல் ரெசிடென்ஸ் மருத்துவ பரிசோதனை மையம் (Al Amal Residence Medical Examination Centre)
 • மினா டவர் ரெசிடென்ஸ் மருத்துவ பரிசோதனை மையம் (Mina Tower Residence Medical Examination Centre)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!